மின்னலின் இளம் வடிவமைப்பாளர் பயிற்சி பட்டறை

0
13

அலோர் ஸ்டார், ஆக 28-

மின்னல் பண்பலையின் தேசிய தினத்தை முன்னிட்டு இளம் வடிவமைப்பாளர் பயிற்சி பட்டறை அண்மையில் கெடா,கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது.

மலேசிய புத்ரா பல்கலைகழகத்தை சேர்ந்த விரிவுரையாளரும், மலேசிய கற்பனை ஆற்றல், புத்தாக்கம் வடிவமைப்பு கழகத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் டாக்டர் வேலு பெருமாள், இந்தப் பட்டறையை வழி நடத்தினார்.

எட்டாவது முறையாக நடைபெறும் இந்த இளம் வடிவமைப்பாளர் பயிற்சி பட்டறையில் கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி மாணவர்களோடு, கூலிம் தமிழ்ப்பள்ளி, வெல்லஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி, புக்கிட் மெர்தாஜாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் ஹென்ரேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.

நமது இந்திய சமுதாயத்தின் முன்னேற்றதிற்கு அரசாங்கத்தின் ஆதரவில் பயன் தரும் பல நிகழ்ச்சிகளை மின்னல் பண்பலை வழங்கி கொண்டிருக்கின்றது. நம்முடைய வளரும் தலைமுறையினரிடம் உள்ள ஆற்றலையும், தனித்திறமைகளையும் வெளிக்கொணர இந்த பயிற்சி பட்டறை வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. நகர் புற மற்றும் தோட்டப்புறப்பள்ளி மாணவர்கள் ஒருசேர இப்பட்டறையில் கலந்து கொண்டனர்.

மின்னல் எப்-எம்மின் மாணவர்களுக்கான இந்த இளம் வடிவமைப்பாளர்கள் திட்டம் அடுத்தாண்டு பகாங்கில் மேற்கொள்ளப் படுவதற்கான சாத்யம் இருப்பதாக நிர்வாகி திருமதி சுமதி குறிப்பிட்டார்.

பகாங் மாநில தமிழ்ப் பள்ளி மாணவர்களும் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுவதற்கான முயற்சிகளை மின்னல் எப் எம் மேற்கொள்ளும். இளம் தலைமுறையினரிடையே கற்பனை சக்தியையும் புத்தாக்கச் சிந்தனைகளையும் வளர்ப்பதில் மின்னல் எப் எம் வானொலி தொடர்ந்து பங்காற்றும் என்றும் திருமதி சுமதி குறிப்பிட்டார்.