19ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இந்தியப் பிரஜை மரணம்

கோலாலம்பூர், செப். 1-

19ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படும் இந்திய பிரஜை ஒருவர் இறந்துகிடந்தார். சனிக்கிழமை காலை 9 மணி அளவில் மவுன்ட் கியாரா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததை பிரிக்பீல்ஸ் இடைக்கால ஓ.சி.பி.டி சூப்பிரடண்ட் அரிபாய் தராவி உறுதிப்படுத்தினார்.

மவுன்ட் கியாரா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தமது பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகளை பார்ப்பதற்காக 55 வயதுடைய பெண்மணி ஒருவர் இந்தியாவிலிருந்து இங்கு வந்ததாக விசாரணையில் தெரிய வருகிறது. கடந்த இரண்டு வார காலமாக தமது கணவருடன் அந்த பெண்மணி மலேசியாவில் தங்கியிருந்ததாக சூப்பிரண்டன் அரிபாய் கூறினார்.\

படுக்கை அறைக்குள் சென்ற அந்தப் பெண்மணி கதவை பூட்டிக் கொண்டதாக தெரிகிறது. அவரது குடும்பத்தினர் கதவைத் திறந்து பார்த்தபோது அப்பெண்மணி அந்த அறையில் காணவில்லை. அந்தப் பெண்மணி கீழே விழுந்து இறந்து கிடந்ததாக அந்த அடுக்குமாடி வீட்டின் பாதுகாவலர் ஒருவர் குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு உடனடியாக மருத்துவ அதிகாரி ஒருவர் அனுப்பிவைக்கப்பட்டார். அந்தப் பெண்மணி மரணமடைந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.