செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > அனல் பறக்கிறது பிக்பாஸ் வீடு..!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

அனல் பறக்கிறது பிக்பாஸ் வீடு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மீண்டும் ஓபன் நாமினேஷனால் வீடு வாதங்களால் கொந்தளித்துப் போயிருக்கிறது. அந்தக் கொந்தளிப்பு அடங்குவதற்குள் பழைய போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரவழைக்கப்பட்டு, தற்போது வீடு அடுத்தச் சுனாமிக்கு தயாராகி இருக்கிறது. பிக்பாஸ் ரசிகர்களுக்கு இனி வரும் நாட்கள் உற்சாகத் தீனிதான்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. 17 போட்டியாளர்களில் 8 பேர் மட்டுமே இப்போது மிஞ்சியிருக்கிறார்கள். அனைவருமே முக்கியமான போட்டியாளர்கள் என்பதும் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

சேரனும் ஷெரீனும் பல வெற்றிகளைப் பார்த்தவர்கள். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் எதுவும் அவர்களுக்கு இல்லை. எனவே வெற்றியை ருசித்திராத இளைஞர்களுக்கு அவ்விருவரும் வழிவிட வேண்டும். அதற்காகத் தாம் அவர்களை நாமினேட் செய்வதாகக் கவின் கூறினார்.

அங்கிருந்து தொடங்கியது ஒரு பூகம்பம். கவின் சொல்லும் காரணத்தை ஏற்க மறுத்த வனிதா, அவரை வார்த்தைகளால் சரமாரியாகச் சாடினார். சாக்‌ஷி வெளியே போகக் கவினே காரணம் என்றும், மக்கள் கவினுக்கு வாக்களித்து வருவது தவறு என்று பேச்சுக்களால் குத்திக் கிழித்துக்கொண்டிருந்தார்.

கவினின் விளக்கத்தை முதலில் சிரித்து, தலையசைத்து ஏற்றுக்கொண்ட சேரன். அதுவரை வாய் திறக்காமலிருந்து, பின்னர் வனிதா பேசுயதும் அப்படியே அங்கு மாறிப் போனதும் அப்பத்தமாக இருந்தது. அதுபோல, முகேனை நாமினேட் செய்யச் சேரன் சொன்ன காரணமும் அங்கு மழுப்பாலாகத் தான் இருந்தது. ஆட்டம், பாட்டம், கைவினை வேலை, வீட்டு வேலை, தலைமைத்துவப் போட்டி என்று சேரனைவிட அந்த வீட்டில் அதிகம் பிரதிபலிப்பதே முகேன்தான்.

போட்டியை போட்டியாகப் பார்க்க வேண்டுமே தவிர, நண்பருக்கு விட்டுக்கொடுப்பது தவறு என்று கூறிய வனிதாவின் அந்த ஒரு வாதத்தைத் தவிர மற்றவை எதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத் தெரியவில்லை.

உணர்வுகளால் ஒருவர் அழக்கூடாது. அழுதால் அது நாடகம் என்று வனிதா கவினை சாடியபோது, ”அப்படி என்றால் நீங்கள் நேற்று கமல் சார் முன்பு சற்று கலங்கி பேசியதும் அப்படிதான் தெரிந்தது” என்று பதிலடி கொடுத்தார் லாஸ்லியா.

தாம் பேசுவதைச் சரியென்றும் நியாயம் என்றும் பேசும் வனிதா. கவின் மற்றும் சாண்டியின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தயாரகவே இல்லை. தாம் விரும்பும் ஷெரீனும் சேரனும் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் வனிதா, அதையே கவின் செய்தால் தவறு என்று வாதிடுகின்றார்.

அவங்க க ஷ்டப்படுறாங்கனு சொல்றதுக்கு நீ யாரு? அவங்களுக்காகப் பேச நீ யாரு? இது ஒரு கேம். அந்தக் கேம்ப நீ சரியில்லனு கவினைப் பார்த்து அத்தனை ஆக்ரோஷமாய் வனிதா கேட்ட கேள்விகளுக்குப் பொறுமையாய், தன் உணர்வின்படி சரியாய் பதில் கூறி வந்த கவின் ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் வனிதாவுக்கு எதிராகக் கத்தவும் தொடங்கினார்.

”வாழ்க்கையில வலியோடு இருக்கும் ஒருவன் ஜெயிக்கும் போது, ஒரு நண்பனாக அதைக் கீழ நின்னு கைத்தட்டிப் பார்க்கத்தான் நான் ஆசைப்படுறேன். என் நண்பர்களோட நெஞ்சில ஏறி நின்னு நான் ஜெயிக்கனும்னா அந்த வெற்றி எனக்கு வேணா. கடைசி வரைக்கும் நான் இப்படிதான் இருப்பேன். அது தவறுன்னா அதற்கான முடிவை மக்கள் எடுக்கட்டும் அதனை நீங்க தீர்மானிக்க வேண்டாம்” இதுவே கவின் வாதமாக இருந்தது. அதில் மனிதாபிமானமும் தெரிந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு முன்பே வெளியேற்றப்பட்ட வனிதா தற்போது ஒய்ல்ட் கார்டு மூலம் தற்போது உள்ளே மீண்டும் போட்டியாளராக இருக்கிறார். இது போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை என்று கூறலாம், அவர் வீட்டுக்குள் வந்த போது அபி, முகேன் பிரச்சனையைப் பெரிதாக்கினார். முன்பு அபிராமி, மதுமிதா சண்டையைப் பெரிதாக்கினார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வீட்டில் வந்து சேர்ந்திருக்கின்றனர் வனிதாவின் அந்தப் பழைய சகாக்கள். மீண்டும் ஒரு போர்க்களம் தொடங்கி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன