தமிழ்ப்பள்ளி மாணவர்களைக் கோல்ஃப் வீரராக்குவோம்! – டத்தோ சுரேஷ்குமார்

ரவாங் செப்டம்பர் 4-

இளம் கோல்ஃப் விளையாட்டாளர்களை உருவாக்குவது எங்கள் நோக்கம் என்றாலும் அதே நேரத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களைக் கோல்ஃப் வீரர்களாகான எங்களின் நடவடிக்கை தொடரும் என கேஎல்ஐஜிஏ சங்கத்தின் தலைவர் டத்தோ சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இந்திய கோல்ஃப் விளையாட்டுகளை உருவாக்கும் நோக்கில் கோலாலம்பூர் இந்தியர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் கோலாலம்பூர் சிலாங்கூர் விளையாட்டாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தச் சங்கம் தற்போது தேசிய ரீதியில் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எஸ்பி மணியம் தலைமையிலான மலேசிய இந்திய கோல்ஃப் சங்கத்தின் கீழ் மாநில ரீதியில் கோல்ஃப் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக கோலாலம்பூர் இந்தியர்கள் கோல்ஃப் சங்கத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பல கோல்ஃ போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் 9ஆவது கோல்ஃப் போட்டி ரவாங்கில் நடந்தது. இப்போட்டியில் 170 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக 17 இளம் விளையாட்டு அவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.  முழுக்க முழுக்க இந்திய கோல்ஃப் விளையாட்டாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கிண்ணங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த மாபெரும் போட்டி நிகழ்ச்சிக்குப் பிறகு விருந்து நிகழ்ச்சியும் நடந்தேறியது அதில் அதிர்ஷ்டக் பரிசுகளும் வழங்கப்பட்டன. அதோடு இதுபோன்ற கோல்ட் விளையாட்டுகளின் மூலம் கிடைக்கும் நிதிகளைக் கொண்டு இந்த அமைப்பு பல சமூக நல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்விக்கு என பல தரப்பட்ட உதவிகளைச் செய்து வரும் இவர்கள் ஆண்டிற்கு 5 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கோல்ஃ பயிற்சியையும் வழங்குகிறார்கள். மற்ற விளையாட்டுகளைப் போல விளையாட்டும் பொருளாதார மேம்பாடு சார்ந்தது என்ற விழிப்புணர்வு நம் சமுதாயத்தின் மத்தியில் எழ வேண்டும் என்கிறார் சுரேஷ்குமார்.

ஆண்டுதோறும் இத்திட்டத்திற்காக 20000 வெள்ளியை ஒதுக்கி 5 மாணவர்களுக்கு இந்த விளையாட்டின் நுணுக்கங்களைத் தலைசிறந்த பயிற்றுநர்களின் மூலம் கற்றுத் தருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். வரும் காலங்களில் பயிற்சிபெறும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையைக் கணிசமான அளவு உயர்த்த வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதை நோக்கி நிச்சயம் செயல்படுவோம் என டத்தோ சுரேஷ் தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்குக் குணாளன் 0122336615, அல்லது காமராஜ் 0194166638 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.