செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அஸ்மினின் புதிய விடீயோ : எனக்கு சம்பந்தமில்லை! – டத்தோ ஶ்ரீ அன்வார்
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

அஸ்மினின் புதிய விடீயோ : எனக்கு சம்பந்தமில்லை! – டத்தோ ஶ்ரீ அன்வார்

பெட்டாலிங் ஜெயா செப் 5-

பிகேஆர் எனப்படும் மக்கள் நீதி கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை தொடர்புபடுத்திய பாலியல் வீடியோ விவகாரத்தில் தமக்குத் துளியளவும் சம்பந்தமில்லை எனக் கூறிய அக்கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அந்த விவகாரத்தில் தலையிடவும் விரும்பவில்லை என்றார்.

“நான் இதில் ஈடுபடவில்லை”. பெட்டாலிங் ஜெயாவில் ஊழல் தடுப்புச் சம்பந்தமாக நடந்த கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று காலை அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட மற்றொரு வீடியோ காட்சி சமூகத் தளங்களில் பரவியது. அது குறித்துக் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் அன்வார் எனக்கு அதில் சம்பந்தமில்லை என்றார்.

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் வீடியோ காட்சிகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று காலை ஆறு வீடியோ காட்சிகள் வெளிவந்தன.

இன்று அதிகாலை 3.35க்கு அஸ்வினின் சமீபத்திய வீடியோ என்ற வாட்ஸப் குழுவில் இந்த வீடியோ பகிரப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன