மோஸ்கோ செப்  6-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீரை சந்தித்தபோது சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாயக்கை ஒப்படைக்குமாறு குறிப்பிட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சைபுதீன் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஜாகிர் நாயக் குறித்து மோடி பேசியதாகவும் இந்த விவகாரம் சார்ந்து இருநாட்டு அதிகாரிகள் தொடர்பில் இருப்பார்கள் என்றும் மோடி குறிப்பிட்டதாக அவர் கூறினார்.

ஆனால் மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஜாகிர் குறித்து எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. காஷ்மீர் சார்ந்த விவகாரங்கள் அதிகமாக விவாதிக்கப்பட்டது. அதனால் ஜாக்கிர் நாயக் விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றார் அவர்.

இரு நாடுகளுக்கான வெளியுறவுத் துறை அமைச்சு ஜாகிர் நாயக் குறித்து விவாதிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய சைபுதீன், ஜாகிர் நாயக்கை ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டது உண்மைதான் என்றார்.

ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் ! மகாதீரிடம் நரேந்திர மோடி கோரிக்கை

தொடர்ந்து பேசிய அவர், ஜாகிர் நாயக் விவகாரம் மலேசியா- இந்தியாவுக்கான உறவை பாதிக்காது என நம்பிக்கை தெரிவித்தார். ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு பொருளாதார உச்சநிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீரும் நேற்று சந்தித்தபோது ஜாகிர் நாய்க் குறித்துக் கேள்வி எழுப்ப பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. அதனைச் சைபுதீன் உறுதிப்படுத்தியுள்ளார்.