புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை! சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை! சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி

புத்ராஜெயா செப்,  6-

இந்து சமயம் குறித்து அவதூறாகப் பேசியதன் காரணமாக ஸம்ரி வினோத் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாடு தழுவிய நிலையில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன. புகார்கள் செய்யப்பட்டுப் பல மாதங்கள் ஆகிய நிலையில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக மலேசிய அணி சட்டத்துறை அலுவலகத்தை நேற்று நாடி இருந்தது.

இந்நிலையில் ஸம்ரி வினோத் இந்துக்களை இழிவுபடுத்திப் பேசிய வீடியோ தொடர்பில் அவர் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசு தரப்பு வழக்கறிஞர் முகமட் ஹனாஃபியா சக்காரியா கடந்த ஜூலை 5-ஆம் தேதி கையெழுத்திட்ட கடிதம் நேற்றுதான் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கடிதத்திற்கான நகல் இந்து ஆக மணியின் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார்.

இக்கடிதம் தாமதமாக வழங்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இவ்விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட முழு விசாரணைக்குப் பிறகு சட்டத்துறை தலைவரிடமிருந்து கிடைத்த பதில் இதுதான் எனவும் மேல் விவரங்களை வழங்குவதற்குத் தமக்கு அதிகாரம் இல்லை என்றும் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தின் தொடர்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஸம்ரி வினோத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சட்டத் துறை அலுவலகம் கூறியிருப்பது மலேசிய இந்துக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என இந்து ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி கூறினார். இஸ்லாம் அல்லது முஸ்லிம் குறித்து யாரேனும் சமூக வலைத்தளங்களில் தவறாகச் சித்தரித்தால் உடனடியாக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் வேளையில் ஸம்ரி வினோத் மீது நூற்றுக்கணக்கான புகார்கள் செய்யப்படும் அதை சட்டத் துறை அலுவலகம் ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.

அதோடு இந்த விவகாரம் மலேசிய இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது என்றும் அருண் துரைசாமி கூறினார்.

3 thoughts on “ஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை! சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி

  1. எம். மகேந்திரன்

    பேசினவன் பேசி விட்டு போகட்டும் அதனால் இந்து மதம் அழிந்து விடப் போகிறதா என்ன. நாம் திடகாத்திரமாக இருந்த்தால் போதும். ஏன் எவனுமு சீன மதத்தையோ புத்த மத்ததையோ இழிவு செய்வதில்லை. யோசிக்க வேண்டிய விசயம்.

  2. நியாயமற்ற முடிவு. இந்துக்கள் இங்கே கிள்ளுக்கீரைகள். இனி ஓட்டுக்கு வாசலில் வந்து நிற்காதே. மக்கள் கூட்டணி மண்ணைக் கவ்வும்.

  3. நியாயமற்ற முடிவு. இந்துக்கள் இங்கே கிள்ளுக்கீரைகள். இனி ஓட்டுக்கு வாசலில் வந்து நிற்காதே மக்கள் கூட்டணியே.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன