பினாங்கு, செப் 6-

பினாங்கு பாலத்தில் இருந்து குதித்த சிறை அதிகாரி ஒருவர் மரணமடைந்தார். 54 வயதுடைய அந்த ஆடவர் பினாங்கு பாலத்திற்கு கீழேயுள்ள பாறைகளில் இறந்துகிடந்தார்.

அந்த ஆடவரின் காரில் அவர் எழுதியதாக நம்பப்படும்  கடிதம் ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்தனர். பினாங்கு பாலத்தின் 5.4 வது கிலோ மீட்டரில்  அந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சிறைத்துறையின்  சார்ஜன்ட் என அடையாளம் கூறப்பட்ட அந்த ஆடவர் திருமணமாகி நான்கு பிள்ளைகளை கொண்டவர் என்பதோடு அவர் சுங்கைப்பட்டாணியை சேர்ந்தவர் என்று பினாங்கு   ஓ.சி.பி.டி துணை கமிஷனர்  சே ஸைமானி சே அவாங் கூறினார்.

சுங்கைப் பட்டாணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த ஆடவர் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு மருத்துவ விடுமுறையை பெற்றிருந்ததாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். வயிற்றுப்புண் பிரச்சனையினால் அவதியுற்று வந்ததோடு இரவில் தூங்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் அந்த ஆடவர் தனது சகாக்களிடம் கூறியுள்ளார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.