செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தலைமையில் குறும்பட விருது விழா!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தலைமையில் குறும்பட விருது விழா!

கோலாலம்பூர் செப்டம்பர் 7-

மலேசிய இந்திய திரைப்பட இயக்குனர் சங்கம் (மிம்தா), மலேசிய இந்திய பாடகர் நடிகர் சங்கம் (மிசா) இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறும்பட விருது விழா மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தலைமை ஏற்கிறார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 6.30க்குப் புக்கிட் ஜாலில் பல்கலைக்கழக ஆசிய பசிபிக் அரங்கில் இவ்விழா நடைபெறுகின்றது.

குறும்படத்தின் மூலம் தங்களின் திரைப்படப் பயணத்தைத் தொடங்க வேண்டும் எனக் காத்திருக்கும் இளைஞர் சமுதாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நாடறிந்த கலைஞரும் இதன் ஏற்பாட்டு குழுவை சேர்ந்த காந்திபன் (பென்ஜி) தெரிவித்தார்.

கலைத் துறையின் முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், விமர்சகர்களைக் கொண்டு இந்தக் குறும்படப் போட்டியின் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தரமான நீதிபதிகள் குழு இருப்பதால் நிச்சயமாகச் சிறந்த குறும்படத்தை உருவாக்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது என்றார் அவர்.

நீர், நீளம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இந்த நிகழ்ச்சியினை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இவ்வேளையில் இந்த விருது விழா வெற்றிப் பெறுவதற்கு உதவிக்கரம் நீட்டி அத்தனை நல்லுள்ளங்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்தக் குறும்பட விருது விழாவிற்கு 132 விண்ணப்பங்களில் 32 குறும்படங்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி உள்ளதாகவும் அதில் 10 குறும்படங்களுக்கு விருது வழங்கப்படும் என்றார் அவர்.

இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டியது மிக அவசியம் என்பதால் ஏற்பாட்டு குழுவினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேல் விவரங்களுக்கு +60 12-661 6110 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன