புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மித்ராவின் செயல்திட்டங்கள் என்ன?- கெராக்கான் கேள்வி
அரசியல்முதன்மைச் செய்திகள்

மித்ராவின் செயல்திட்டங்கள் என்ன?- கெராக்கான் கேள்வி

செராஸ் செப். 7-

இந்திய சமுதாயத்தின் ஏற்றமிகு எதிர்காலத்திற்குப் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் மித்ரா எம்மாதிரியான திட்டங்களைக் கொண்டுள்ளது என கெராக்கான் கட்சியின் தேசிய தலைமை செயலாளர் மாக் கா கியோங் கேள்வி எழுப்பினார்.

அது குறித்து முழுமையான விளக்கம் பெற மித்ரா உடன் சிறப்புச் சந்திப்புக் கூட்டத்தை ஏற்படுத்துவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக மலேசியர்களின் கருத்துக்களம் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் பொருளியல் ஆய்வாளர் மனோகரன் மொட்டையன், பிஎஸ்எம் கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார், கெராக்கான் கட்சியின் ஒற்றுமை பிரிவு தலைவர் புவவீதன் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்கள்.

மலேசிய பொருளாதாரத்தில் சமத்துவம், அரசியல் கண்ணோட்டம், பி40 பிரிவைச் சேர்ந்த பயனீட்டாளர்கள் ஆகிய தலைப்புகளை ஒட்டி அவர்கள் பேசினர். கெராக்கான் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடந்தது. கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி அரசுசாரா இயக்கங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

வரும் காலங்களில் இது போன்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நடத்துவதற்குக் கெராக்கான் ஆர்வம் கொண்டுள்ளது. தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகப் பல நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக பொருளாதார ரீதியில் அவர்களை மேம்படுத்த வேண்டும் எனப் பல்வேறு திட்டங்களைக் கடந்த அரசு கொண்டிருந்தது.

தற்போதைய நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு இம்மாதிரியான செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது என்பது குறித்த தகவல் வெளிப்படையாக இல்லை. இதனை அறிந்து கொள்ளும் வகையில் மித்ரா உடன் கூடிய விரைவில் சந்திப்பை நடத்த இருப்பதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் மாக் கா கியோங் செய்தியாளர்களிடம் கூறினார்

One thought on “மித்ராவின் செயல்திட்டங்கள் என்ன?- கெராக்கான் கேள்வி

  1. விமலநாதன் முனியாண்டி

    கெராக்கான் கட்சி தொடர்ந்து சாமானிய மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன