செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நல்ல உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும்! பொன்.வேதமூர்த்தி
அரசியல்முதன்மைச் செய்திகள்

நல்ல உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும்! பொன்.வேதமூர்த்தி

ஈப்போ, செப்.09 –

சமுதாய நலனில் அக்கறை உள்ள நல்ல உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும் என்று மலேசிய இந்தியர்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறைகூவல் விடுத்துள்ளார்.

எம்.ஏ.பி.யுடன் இந்தியர்களின் எதிர்காலம் என்னும் தலைப்பில் ஈப்போ மாநகரம், பண்டார் ஈப்போ ராயா, மேடான் இஸ்தானா-வில் அமைந்துள்ள டத்தோ டாக்டர் சக்திவேல் மண்டபத்தில் செப்டம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முந்நூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, நான்காவது தொழிற்புரட்சி மூலம் வேலை வாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட இருக்கிறது. கல்வியுடன் தொழில் கல்வியையும் பெற்றிருந்தால், ‘கோட்டா’ என்னும் இட ஒதுக்கீட்டு முறையை-யும் கடந்து மலேசிய இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக அமையும் என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக, நம் சமுதாயம் எதிர்காலத்தில் வளமான நிலையை எட்ட சமூக ஆர்வம் உள்ள நல்ல உள்ளத்தினர் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரும் மலேசிய முன்னேற்றக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து உறுப்பியப் படிவத்தைப் பெற்றுக் கொண்டனர்.

அதைப்போல, இன்று செப்டம்பர் 9, திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், ஃபுராமா தங்கும் விடுதியில் பொருளாதார ஆலோசனை மற்றும் மேம்பாட்டுக் குழுவினருடான கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

கல்வி, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர், நிதி பரிவர்த்தனை, சமூக மேம்பாடு என ஆறு பிரிவுகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள், நிபுணர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொருளியல் வல்லுநர்கள் ஆகிய தரப்பினர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய அமைச்சர், பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின்வழி, அதிகமான நன்மைகளை இந்திய சமுதாயம் அடைவதற்கான வழிவகைபற்றி குறிப்பிட்டார்.

2021-2025 காலக் கட்டத்தை உள்ளடக்கிய 12-ஆவது மலேசியத் திட்டம் குறித்து இந்தக் கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன