செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி!
சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி!

கோலாலம்பூர் செப். 10-

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் ஏழாவது தலைவராக கோபி குமரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.

இம்மாதம் ஒன்றாம் தேதி கோலாலம்பூர் கிரான்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெற்ற பதவிக்கான வேட்பு மனு தாக்கலின் போது சிலாங்கூர் மிட்லேண்ஸ் தமிழ் இளைஞர் மணிமன்றம் தலைவருமான கோபி குமரனை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

அதனால் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் புதிய தலைவராக கோபி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் படுகிறார் என தேர்தல் நடவடிக்கை குழு அதிகாரி அறிவித்தார்.

சமூக கலைமணி சா.ஆ. அன்பானந்தன் சங்கநாதம், கா கிருஷ்ணமூர்த்தி, மணி வேந்தன் சிவராமன், மணிச்சுடர் ஆர்ஆர்எம் கிருஷ்ணன், மணி மைந்தன் பொன்னையா, மணிவேல் முரளி, ஆகியோருக்குப் பிறகு கோபி குமரன் மன்றத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிரம்பான் டெஃப் கல்லூரியில் முன்னாள் தலைவர் கு முரளி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கோபி அதிகாரபூர்வமாக தமது பொறுப்பை ஏற்றுக்கொள்வார். சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து 29 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் மணிமன்ற தேசிய தலைவராக தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும் என்று புதிய தலைவர் கோபி தெரிவித்தார்.

மாநாட்டில் பல்வேறு திட்டங்களை அறிவிப்பதோடு தமிழ் இளைஞர் மணிமன்றம் இனம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை குறித்து அவர்களுக்கு வலியுறுத்தும் என்றும் கோபி கூறினார். மாநாடு குறித்து தகவல் பெற விரும்புபவர்கள் 0176262628 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

One thought on “மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி!

  1. விமலநாதன் முனியாண்டி

    தங்களது செய்தியில் சில உண்மைகள் மறைக்கபட்டுள்ளது…சகோதரர் கோபிக்கு முன்பு சகோதரர் இரவி தேவராசு இருந்தார்…பழைய நிர்வாகம் கணக்கறிக்கை மற்றும் நிர்வாக கோப்புகளை சமிர்பிக்கத பட்சத்தில் நிலமை இளைஞர் பதிவதிகாரிக்கு கொண்டு செல்லப்பட்டு மறுதேர்தல் நடத்த ஆனையிடப்பட்டது. செய்தியை சரியாக செல்லுங்கள்… நன்றி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன