செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: பன்னாட்டு நிறுவனங்களுடன் மித்ரா சந்திப்பு
அரசியல்முதன்மைச் செய்திகள்

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: பன்னாட்டு நிறுவனங்களுடன் மித்ரா சந்திப்பு

சைபர்ஜெயா, செப்.10-

வேலைவாய்ப்பு சந்தையும் வாழ்க்கைச் சூழலும் அதிவேகமாக மாற்றம் கண்டுவரும் தற்போதைய சூழ்நிலையில் மலேசிய இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்களுடன் மித்ரா வட்டமேசைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது என்று பிரதமர் துறை அமைச்சர் கூறினார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர்க்கல்வி பெறும் மாணவர்கள்கூட, நான்கு ஆண்டுகள் கழித்து பட்டம் பெற்று வெளி உலகில் வரும்பொழுது, நடைமுறையில் உள்ள தொழில்நுட்பம் இன்னும் வேகமாக வளர்ந்து விடுகிறது.

இதுபோன்ற சூழலை எதிர்கொள்ளும் மாணவர்களைத் தயார்ப் படுத்தவும் பொதுவாக உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக உயர்க்கல்வி மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் DXC, AMAZON, CISCO SYS., DELL போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் மித்ரா உடன்பாடு கண்டு வருவதாக சைபர் ஜெயா, சைபர் வியூ தங்கும் விடுதியில் நடைபெற்ற வட்டமேசைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்திவிட்ட மாணவர்களுக்கான எதிர்காலம், அவர்களுக்குரிய வேலை வாய்ப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

பல்வேறு குடும்ப சூழல் மற்றும் புறக் காரணிகளால் கல்வியை முழுமையாக முடிக்காத மாணவர்களும் பொருத்தமான வேலைவாய்ப்பைப் பெறுவதன்வழி, அவர்களுக்கான வாழ்வாதாரமும் உறுதிசெய்யப்படும் என்ற கருத்தின் அடிப்படையில் மித்ரா அதிகாரிகள் இந்த நிறுவனங்களுடன் பேசி வருகின்றனர் என்றும் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன