புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மலேசியர்களின் சுதந்திர எதிர்பார்ப்பு : – டிரா மலேசியா
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசியர்களின் சுதந்திர எதிர்பார்ப்பு : – டிரா மலேசியா

14-வது பொதுதோர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் உறுதியத்துள்ளப்படி உள்துறை அமைச்சுக் குடியுரிமை மற்றும் அடையாள ஆவணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை வழங்கும் என டிரா மலேசியா எதிர்பார்கிறது.

மலேசிய அரசியலமைப்புச் சட்டப்படி டிரா மலேசியாவின் ப்ரிந்துரைகள் பின்வறுமாரு:

1.சுதந்திர தினம் அல்லது மலேசிய தினத்திற்கு முன் பிறந்தவர்கள் சுதந்திர தினம் அல்லது மலேசிய தினத்திற்கு முன் மலேசியாவில் பிறந்தவர்கள் வேறு நாட்டின் குடியுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்றால் அவர்களுக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

2. மலேசியரின் குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவர் மலேசிய குடியுரிமையோ அல்லது மலேசியாவில் நிரந்தரக் குடியுரிமையோ பெற்றிருந்தால் அவர்களுடைய குழந்தைகள் மலேசியாவிலோ அல்லது வெளிநாட்டில் பிறந்தாலும் மலேசிய குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

3. தத்துப் பிள்ளைகள் தத்தெடுக்கும் பெற்றோர்களில் ஒருவர் மலேசிய குடியுரிமை பெற்றிருந்தால் தத்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

4.மலேசிய தினத்திற்குப் பின் பிறந்தவர்கள் மலேசிய தினத்திற்குப் பின் மலேசியாவில் பிறப்பவர்கள் வேறு நாட்டில் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்றால் அவர்களுக்கு மலேசிய குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

5. அடையாள ஆவணம் இல்லாதவர்கள் மலேசியாவிலேயே பிறந்து எவ்வித அடையாள ஆவணங்களும் இல்லாதவர்களை மலேசியர்களாகப் பதிவு செய்ய வேண்டும்.

6. குடியுரிமை இல்லாமல் பிறப்புப் பத்திரம் வைத்திருப்பவர்கள் / தற்காலிக குடியுரிமை.

குடியுரிமை இல்லாமல் பிறப்புப் பத்திரம் வைத்திருப்பவர்களும் தற்காலிக குடியுரிமை கொண்டிருப்பவர்களும், 21 வயதிற்கு மேற்பட வேறு நாட்டின் குடியுரிமை பெறாதவர்களும் மலேசிய குடியுரிமைக்கோ நிரந்தரக் குடியுரிமைக்கே விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

7. நிரந்த குடியுரிமை பெற்றவர்கள் 12 வருடங்களுக்கும் மேல் மலேசியாவிற்கு வசிக்கும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் நன்னடத்தையும் வேணி வருகிறவர்களாயின்; மலேசியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற விரும்பும் அவர்களுடைய கோரிக்கைகள் நேர்மையாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.

8. விண்ணப்ப பரிசீலிக்கப்படும் காலம் வரையறை ஒருவருடத்துக்கும் கீழ் குறைக்கப்பட வேண்டும்.

9. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பக்கள் மறுபரிசீலனை செய்யும் கோரிக்கைகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.

10. விண்ணபங்கள் நிராகரிக்கபடுவதற்கான காரணங்கள் அறிவிக்கப்பட வேண்டும்

11. விழிப்புணர்வு முகாம்கள் பரவலாக நடத்தப்பட வேண்டும்.

எஸ்.டி.ஜி 2030-க்கு ஒப்ப மலேசிய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச மாநாட்டுக்கு ஏற்ப உள்துறை அமைச்சின் இயக்க செயல்முறை குடியுரிமை மற்றும் அடையாள ஆவணப் பிரச்சனைக்குத் தீர்வை வழங்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன