செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்!

கோலாலம்பூர், செப். 11-

தலைநகர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வ௫ம் தமிழ்ப் பேரவையின் “பேரவைக் கதைகள்” இன்று மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களால் ஒவ்வொ௫ ஆண்டும் நடத்தப்படும் பேரவைக் கதைகள் சிறுகதைப் போட்டி கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் முயற்சியாகத் தொடங்கப்பட்ட வேளை, 1986 ஆம் ஆண்டில் தேசிய சிறுகதைப் போட்டியாக வளர்ச்சிக் கண்டது.

அன்று முதல் இன்று வரை இச்சிறுகதைப் போட்டி தோய்வடையாமல் இன்றையத் தமிழ்ப் பேரவை செயலவையினால் தொடரப்பட்டு வ௫கிறது. உலகிலேயே ஒ௫ பொதுப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வ௫ம் இந்திய மாணவ அணி ஒன்று தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்தி புத்தகமாக பதிப்பிக்கும் இலக்கியத் திட்டத்தை முன்னெடுக்கும் ஒரே மாணவ அணியாகத் தமிழ்ப் பேரவைத் திகழ்கிறது.

அந்த வகையில் மலேசியாவில் அதிகமான தமிழ்ச் சிறுகதைகளை வெளியிட்ட தமிழ்ப் பேரவையை அங்கீகரிக்கும் வகையில் இன்று “பேரவைக் கதைகள்” சிறுகதைத் திட்டம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இச்சாதனைக்கான நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று மலேசிய சாதனைப் புத்தக நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய ஆய்வியல் துறை தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் கி௫ஷணன் மணியம், மாணவ நல அதிகாரி தி௫மதி விஜயமலர், தமிழ்ப் பேரவை தலைவர் சிவம் தமிழ்ச்செல்வம், இயக்குநர் திலாஷினி இராஜகோபால், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துச் சிறப்பித்தனர்.

இதனிடையே, எதிர்வ௫ம் 21/09/2019 மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேரவையின் 60ஆம் ஆண்டு வைரவிழாவும் 33ஆவது பேரவைக் கதைகள் நூல் வெளியீட்டு விழாவும் நடைப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

One thought on “மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்!

  1. வனஜா அண்ணாமலை

    வணக்கம்.பேரவைக்கதைகளைத் துவக்கம் தொட்டே முகர்ந்து வருகிறேன். மேலும் சிறப்புடன் பேரவை கதைகள் மலர்ந்திட வாழ்த்துகிறேன்.தமிழ்மொழியை இம்மலேசிய நாட்டில் மணக்கச் செய்யும் மலாயா பல்கலைகழகத் தமிமழ்பற்றாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் தங்கள் சேவை
    மலரட்டும் தமிழ் மணம்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன