புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஜாகிர் நாயக் விவகாரம்: துணை முதல்வர் ராமசாமியிடம் விசாரணை
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஜாகிர் நாயக் விவகாரம்: துணை முதல்வர் ராமசாமியிடம் விசாரணை

ஜார்ஜ்டவுன் செப். 10-

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் செய்த போலீஸ் புகாரின் அடிப்படையில் பினாங்கு மாநில இரண்டாம் முதல்வர் பேராசிரியர் முனைவர் ராமசாமி, பாகான் டலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் ஆகியோரிடம் போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

கோம்டார் 52 ஆவது மாடியில் அமைந்திருக்கும் பேராசிரியர் முனைவர் ராமசாமியின் அலுவலகத்திற்கு வருகை புரிந்த புக்கிட் அமானை சேர்ந்த 2 போலீஸ் அதிகாரிகள் காலை 8 மணி தொடங்கி மதியம் 1 15 வரை வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

பேராசிரியர் ராமசாமி தனது வழக்கறிஞர் டத்தோ என் முரளியுடன் இணைந்து கிட்டத்தட்ட 5 மணி நேரம் தனது வாக்குமூலத்தை வழங்கிய நிலையில் சதீஷ் வாக்குமூலம் வழங்க 3 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது.

அவதூறுக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 500 மற்றும் 504 பிரிவின் கீழ் இவர்கள் விசாரிக்கப்பட்டனர். மலேசிய இந்துக்களின் விசுவாசம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு ஜாகிர் நாயக்கிற்கு தகுதியில்லை என்ற அறிக்கை சார்ந்துதான் இந்த விசாரணையை மேற்கொள்ளப்படுகின்றது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் உட்பட மேலும் 5 ஐந்து பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்யப்பட்டதை போலீஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன