புதுக்கவிதை உலகில் பலருக்கும் நன்கு அறிமுகமானவர் மு.மணிக்குமார். இவர் நமது முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களுக்கு அரசியல் செயலாளராகவும் சேவையாற்றியவர். ஏறக்குறைய 20 ஆண்டுகள் அரசு துறையில் சேவையாற்றி வந்த போதிலும் கவிதை உலகில் இவரது படைப்புகளுக்குத் தனி அடையாளங்கள் உண்டு.

அவ்வகையில், மு.மணிக்குமார் அவர்கள் கைவண்ணத்தில் உருவான ” விரல் நுனியில் விடியல் கனவுகள்” & “எனது இன்னொரு நான்” இரட்டை புதுக்கவிதை நூல்கள் எதிர்வரும் 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் தலைநகர் கிராண்ட் பசிபிக் விடுதியில் வெளியீடு காணவுள்ளது.

இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்கள் தலைமைத் தாங்கும் வேளையில், தமிழகக் கவிஞரும் உயிர் எழுத்து ஆசிரியருமான சுதீர் செந்தில் அவர்கள் சிறப்பு வருகையளிக்க விருக்கின்றார்.

இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு வட்டார பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள், வளர்ந்து வரும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என அனைவரும் திரளாகக் கலந்து சிறப்பித்து ஆதரவு வழங்க ஏற்பாட்டுக் குழுவினர் சார்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.