புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > வெட்ரன் லீக் : ஷாஆலம் மட்சூஷீத்தா அரங்கத்தில் சனிக்கிழமை இறுதியாட்டம்!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

வெட்ரன் லீக் : ஷாஆலம் மட்சூஷீத்தா அரங்கத்தில் சனிக்கிழமை இறுதியாட்டம்!

ஷாஆலம் செப் 11-

தாமான் ஸ்ரீ மூடா LB (எல் பி) கால்பந்து கிளப்பின் ஏற்பாட்டில் மாநிலங்களுக்கிடையிலான லீக் கால்பந்து போட்டி சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இப்போட்டியின் இறுதி சுற்று மற்றும் இறுதியாட்டம் செப்டம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ஷாஆலம் மட்சூஷீத்தா விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது.

சிலாங்கூர் , கோலாலம்பூர், பினாங்கு, பகாங் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டன. ஒவ்வொரு மாநிலத்தின் சார்பில் அந்தந்த மாநில வெட்ரன் கால்பந்து குழுக்கள் கலந்து கொண்டன.

சிலாங்கூர் எல்பி வெட்ரன், கோலாலம்பூரின் மெல்வோட் எப்.சி, பினாங்கின் கே.எஸ்.எஸ்.என் வி.எப்.டி, பகாங்கின் கூல்லிட், நெகிரி செம்பிலானின் சிலியாவ் எப்.சி ஆகிய வெட்ரன் குழுக்கள் இப் போட்டியில் பங்கேற்றன.

முதன் முறையாக மூத்த ஆட்டக்காரர்கள் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஆறு மாதங்களாக நடைபெற்று சனிக்கிழமை இறுதி சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதி ஆட்டம் நடைபெறவிருக்கிறது.

நட்புறவுக்கு கால்பந்து என்ற கருப்பொருளில் இப்போட்டி நடத்தப்பட்டது. சனிக்கிழமை எல்.பி வெட்ரன், மெல்வோட் எப்.சி, கே.எஸ்.எஸ்.என்.வி.எப்.டி, கூல்லிட் .இறுதிச்சுற்றில் களம் காண்கின்றன .

தொடர்ந்து இறுதி ஆட்டமும் நடைபெறும் . எனவே இந்த ஆட்டங்களை காண்பதற்கு கால்பந்து ரசிகர்கள் திரண்டு வரும் படி போட்டி ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் திருச்செல்வன் பத்மநாபன் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன