கோலாலம்பூர் செப்டம்பர் 12- 

செராஸ் லிட்டில் இந்தியாவில் முதல் முறையாகத் தீபாவளி சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பாலு தெரிவித்தார்.

செராஸ் சுற்றுவட்டாரத்தில் அதிகமான குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. அதேவேளையில் அதிகமான இந்திய சமூகத்தினரும் இங்கு வசித்து வருகிறார்கள். தீபாவளி காலங்களில் செராஸ் பத்து 11 இல் உள்ள இந்தியர்களின் கடைகளில்தான் அம்மக்கள் பொருட்களை வாங்கி வந்தனர்.

மேலும் ஒரு சிலர் கோலாலம்பூர் உட்பட இதர பகுதிகளுக்குச் சென்று தீபாவளி காலங்களில் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த ஒரு சூழ்நிலையில்தான் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் செராஸ் பத்து 11இல் தீபாவளி சந்தை இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி சந்தைக்குக் காஜாங் நகராண்மைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. வரும் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை இந்தத் தீபாவளி சந்தை நடைபெறும் எனப் பாலு செய்தியாளர்களிடம் கூறினார். சுமார் 40 கடைகள் தீபாவளி சந்தையில் அமைக்கப்பட உள்ளன எனக் கூறிய சந்திரமோகன் உள்ளூர் வியாபாரிகளுக்கு மட்டுமே இங்கு வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தீபாவளிக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்கும் மையமாக இந்தத் தீபாவளி சந்தையில் விளங்க உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் இந்தத் தீபாவளி சந்தைக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தீபாவளி சந்தை குறித்த மேல் விவரங்களுக்கும் கடைகளைப் பெறுவதற்கும் பாலு 01133333991′ அல்லது சந்திரமோகன் 0163366657 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்