செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இளைஞர்களின் சிந்தனை மாற்றமே புதிய அத்தியாயம்! பிரபாகரனுக்கு இளவரசர் எட்வர்ட் ஆலோசனை
அரசியல்முதன்மைச் செய்திகள்

இளைஞர்களின் சிந்தனை மாற்றமே புதிய அத்தியாயம்! பிரபாகரனுக்கு இளவரசர் எட்வர்ட் ஆலோசனை

கோலாலம்பூர் செப் 12-

இளைஞர்களின் சிந்தனை மாற்றமே ஒரு தேசத்தின் புதிய அத்தியாயம். இளைஞர்களின் சிந்தனை மாற்றத்திற்கு பாடுபடுங்கள் என்று இளவரசர் எட்வார்ட் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனுக்கு ஆலோசனை கூறினார்.

மாறிவரும் உலக சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் தங்களது கல்வி ஆற்றலையும் உலக நடப்புகளையும் ஆழந்து கற்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

அதனை நோக்கி உங்கள் செயல் பாடுகள் அமைய வேண்டும் என்று நாட்டின் மிக இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரனிடம் இளவரசர் வலியுறுத்தினார்.

மலேசியாவிற்கு இரண்டுநாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள இளவரசர் எட்வர்ட், மாமன்னர் தம்பதியை சந்தித்த பின்னர், இளையோருடனான வட்ட மேசை கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அதன் பின்னர் மலேசியாவிற்கான பிரிட்டிஷ் தூதரகத்தில் அழைக்கப்பட்ட பிரமுகர்களுடன் நடைபெற்ற விருந்துபசரிப்பில் கலந்துக் கொண்டார்.

அந்த விருந்துபசரிப்பின் போது, மிக இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினர் என பிரபாகரனை அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது, “இளைஞர்களின் சிந்தனை மாற்றமே ஒரு தேசத்தின் புதிய அத்தியாயம். அதனை நோக்கி உங்களது பணியை முன்னெடுங்கள் என இளவரசர் எட்வர்ட் ஆலோசனை கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன