புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > வெள்ள நிவாரணப் பணிக்கு மத்திய அரசின் சிறப்பு ஆலோசகர் நியமனம்!
அரசியல்முதன்மைச் செய்திகள்

வெள்ள நிவாரணப் பணிக்கு மத்திய அரசின் சிறப்பு ஆலோசகர் நியமனம்!

பிறை, செப்டம்பர் 12-

பினாங்கு மாநிலத்தில் வெள்ள அபாயப் பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கும் சுங்கை பினாங் சுற்று வட்டாத்திற்கு மத்திய அரசு சார்பில் சிறப்பு ஆலோசகர் நியமனம் கண்டுள்ளதாக, மாநிலத்தின் வீடமைப்பு, ஊராட்சி மன்றம் மற்றும் நகரப் பெரு வளர்ச்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் டியோ கூறினார்.

சுங்கை பினாங் சுற்று வட்டாரங்களில் மழைக் காலங்களில் எளிதில் நீர் சூழ்ந்து விடும் அவலம் நீண்ட காலப் பிரச்சனையாக நீடித்து வரும் நிலையில், இதற்கு தகுந்த முறையில் நிவாரணம் காண வேண்டுமென்ற கோரிக்கை கடந்த காலங்களில் பலமுறை மத்திய அரசின் கவனத்திற்கு முன் வைக்கப்பட்டதை ஜெகதீப் நினைவு கூர்ந்தார்.

ஆயினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அலட்சியத் தன்மையே வெளிப்பட்டதால் சுங்கை பினாங் பகுதியில் நிலவுகின்ற வெள்ளப் பிரச்சனைக்கு தகுந்த தீர்வு காணப்படாத சங்கடம் பல்லாண்டுகளாக தொடர்ந்த வண்ணமிருப்பது இங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு அதிருப்தியையும் வேதனையையும் அளித்து வருவது தொடர்பிலும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்தால், மத்தியில் நம்பிக்கை கூட்டணி அரசுடனான கலந்தாய்வுக்குப் பின்னர் இப்பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்பதற்கான நல்லிணக்கம் ஏற்பட்டடிருப்பதைத் தொடர்ந்து,இவ்வாண்டு இறுதியில் இதற்கான நிவாரணப் பணிகள் தொடங்கப்படுவதற்கான சாத்தியக் கூறு தென்பட்டிருப்பதை ஜெகதீப் உறுதிப்படுத்தினார்.

ஏறத்தாழ 10 கோடி ரிங்கிட் செலவினை ஈர்க்குமென்று எதிர்ப்பார்க்கப்படும் இந்த மாபெரும் நிவாரணப் பணிக்கு இதன் பொருட்டு சிறப்பு ஆலோசகர் ஒருவர் நியமனம் கண்டிருப்பதையும் விவரித்த அவர்,அன்னாரின் தலைமையில் அதற்கான நடவடிக்கைகளுக்கு வழி பிறந்திருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இதன் வழி சுங்கை பினாங் வட்டாரத்தில் நிலவுகின்ற வெள்ள அபாயத்திற்கு தகுந்த முறையி; தீர்வு காண்பதற்கு மத்திய அரசின் தயவு கிட்டியிருப்பது தமக்கு மனநிறைவை ஏற்படுத்தியிருப்பதாகவும், மாநிலத்தில் வெள்ள அபாய இடங்களாக அடையளம் காணப்பட்டிருக்கும் இதர பலப் பகுதிகளில் தகுந்த முறையில் நிவாரணப் பணிகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜெகதீப் மேலும் விவரித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன