புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ஆஸ்ட்ரோ வானவில் ‘அள்ளுங்கள் வெல்லுங்கள்’தேடல்
கலை உலகம்சமூகம்

ஆஸ்ட்ரோ வானவில் ‘அள்ளுங்கள் வெல்லுங்கள்’தேடல்

ஆஸ்ட்ரோ வானவில் புத்தம் புதிய கேம் ஷோ, ‘அள்ளுங்கள் வெல்லுங்கள்’ விரைவில் உங்கள் தொலைக்காட்சியில் ஒளியேறவுள்ளது.

அவ்வகையில், இந்நிகழ்ச்சியின் நேரடி தேர்வு நாளை செப்டம்பர் 14-ஆம் தேதி காலை 10 மணி தொடக்கம் மாலை 6 வரை பூச்சோங் பகுதியில் அமைந்துள்ள Victory Film Production எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

18 முதல் 50 வயதுக்குள் உட்பட்ட ஆர்வமுள்ள மலேசியர்கள் ஜோடியாக வந்து இந்த நேரடி தேர்வில் கலந்து கொள்ளலாம். கொடுக்கப்படும் சவால்களைச் சிறப்பாக விளையாடும் ஜோடிகள் அள்ளுங்கள் வெல்லுங்கள் நிகழ்ச்சிக்குத் தேர்தெடுக்கப்படுவார்கள். மறவாமல் கலந்து கொண்டு, உங்கள் திறமையை வெளி காட்டுங்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்களைத் தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பு காத்து கொண்டிருக்கிறது.

‘அள்ளுங்கள் வெல்லுங்கள்’ ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் விரைவில் எதிர்பார்க்கலாம்.  மேல் விவரங்களுக்கு, www.astroulagam.com.my அகப்பக்கத்தை வலம் வருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன