புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அமைச்சர் சேவியர் ஜெயக்குமாரை சந்தித்தார் மலேசியாவிற்கான ஸ்வீடன் தூதர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

அமைச்சர் சேவியர் ஜெயக்குமாரை சந்தித்தார் மலேசியாவிற்கான ஸ்வீடன் தூதர்

புத்ராஜெயா செப்.  13-

நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரை மலேசியாவிற்கான ஸ்வீடன் தூதர் டான்ங் ஜூஹ்லின் டன்பெல்ட் சந்தித்தார்.

இதனை அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நீர் நிலம் இயற்கைவள அமைச்சரை சந்தித்து தமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பாக நீர், நிலம் மேம்பாட்டிற்கு இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.

நீர், நிலம் குறித்து இருவரும் பல விவகாரங்கள் குறித்து கலந்துரையாடிய குறிப்பிட்டவர் இந்த சந்திப்பு மிகவும் அபூர்வமானது என்றார்.

மலேசியாவிற்கான ஸ்வீடன் தூதரை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி என டாக்டர் சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். அதோடு வருங்காலத்தில் ஸ்வீடன் – மலேசியா என இரண்டு நாடுகளும் இணைந்து பயணிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன