திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஒபிகே சோதனை நடவடிக்கையில் இரு தாய்லாந்து ஆடவர்கள் கைது
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஒபிகே சோதனை நடவடிக்கையில் இரு தாய்லாந்து ஆடவர்கள் கைது

கோலாலம்பூர், செப் 14-

ஒபிகே எனப்படும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் வனவிலங்குகளை கடத்திய இரு தாய்லாந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக நீர்,நிலம், இயற்கைவள அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 10ஆம் தேதி உலு சுங்கை தியாங் தொகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். நாட்டில் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய வனவிலங்கு பாதுக்காப்பு இலாகா, தேசிய போலீஸ் படை, பேராக் மாநில பூங்கா கழகத்தின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த இரு ஆடவர்களிடமிருந்தும் 15 முள்ளம் பன்றிகள், காட்டுப் பூனை, ஆமைகள் போன்ற விலங்குகளும், கோடாரி, பாராங் கத்தி, மீன் வலைகள் என பல ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு 2010ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 29, 1984ஆம் ஆண்டும் தேசிய வனவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படும்.

வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒபிகே சோதனை நடவடிக்கை முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கையில் இது முதல் வெற்றியாகும்.

இந்த சோதனை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய தேசிய போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோருக்கு நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடும் நபர்கள் மீது அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன