வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > காற்றின் தூய்மைக்கேட்டால் மூடப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
சமூகம்முதன்மைச் செய்திகள்

காற்றின் தூய்மைக்கேட்டால் மூடப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

கோலாலம்பூர், செப்டம்பர் 18-

காற்றின் தூய்மைக்கேடு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் தற்காலிகமாக மூடப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், இதுவரை 7 மாநிலங்களில் 1484 பள்ளிகள் மூடப்பட்டிப்பதாக கல்வி அமைச்சு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 538 பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.

சிலாங்கூர் 9 மாவட்டங்களில் காற்றின் தூய்மைக்கேடு குறியீடு 200ஐ தாண்டியுள்ளது. புத்ராஜெயாவிலுள்ள 25 பள்ளிகளும், இரண்டாவது நாளாக இன்று மூடப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராவில் 288 பள்ளிகளும். பினாங்கில் 165 பள்ளிகளும், சரவாக்கில் 337 பள்ளிகள் இன்று மூடப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன