வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > பிரச்சினைக்குத் தற்கொலை தீர்வாகாது! வழிகாட்டுகிறார் சாலினி கணேசன்
மற்றவை

பிரச்சினைக்குத் தற்கொலை தீர்வாகாது! வழிகாட்டுகிறார் சாலினி கணேசன்

கோலாலம்பூர்,  செப் 18-

இளம் வயதில் ஏற்படும் பிரச்சினைகளை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் இளைஞர்கள் இன்று தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். குறிப்பாக இப்பிரச்சனையில் அதிகமான இளம்பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கு வழிகாட்ட மலேசிய இளம் பெண்கள் தலைமைத்துவ மேம்பாடு இயக்கம் செயல்படுவதாக அதன் தோற்றநர் சாலினி கணேசன் தெரிவித்தார்.

40 வினாடிக்கு ஓர் இளைஞர் தற்கொலை செய்து கொள்வது ஒரு கவலைக்குரிய நிலை ஆகும் என குறிப்பிட்ட சாலினி தற்போது நமது நாட்டில் உள்ள இளைஞர்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிள்ளைகளுக்கு மன அழுத்த பிரச்சனை இருப்பதைப் பல பெற்றோர்கள் அறிந்திருப்பதில்லை. சிலர் அதை அறிந்திருந்தாலும் அதனை எவ்வாறு களைவது யாரிடம் முறையிடுவது எனத் தெரியாமல் தவிக்கின்றார்கள்.

இந்த விவகாரத்தில் அதிகமாகப் பாதிக்கப்படுவது இளம்பெண்கள் தான். அவர்களுக்கு வழிகாட்டுபவதோடு தலைமைத்துவ மிக்க இளைய சமுதாயமாக உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் வழிவகைச் செய்ய இளம் பெண்கள் தலைமைத்துவ மேம்பாடு இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது என சாலினி கணேசன் கூறினார்.

மன அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலைக்குத் தள்ளப்படும் இளம்பெண்களைக் கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகப் பல செயல்திட்டங்களைத் தங்களது இயக்கம் கொண்டிருப்பதாகவும் இந்த இயக்கத்தில் சிறந்ததொரு தொண்டுழீயர்கள் பணியாற்றுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதனிடையே 13 முதல் 25 வயதிற்குட்பட்ட இளம் பெண்களை உட்படுத்தித் தற்போது நிலவி வரும் பல்வேறு சமூகப் பிரச்சனைகளை மட்டும் கவனிக்காமல் இளம் பெண்களின் கவனத்தைச் சற்றுத் திசை திருப்புவது மட்டுமின்றி முன்னேற்றப் பாதையில் செல்ல ஆசைப்படும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும். பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் ஆனால் அதற்கு வழிகாட்ட தான் ஆட்கள் இல்லை.

பல்வேறான பிரச்சினைகளிலிருந்து விடுபடப் பெண்கள் பொருளாதார ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியம். இப்பிரச்சனையை எதிர்நோக்கும் இதர பெண்களுக்கு இது மிகச் சிறந்த உதாரணமாக விளங்கும் என பெர்னாமா தமிழ்ச் செய்தி பிரிவின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான சாலினி குறிப்பிட்டார்.

புதிய திறன் மேம்பாடு, கல்வி மேம்பாடு, என இவர்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்குச் சிறந்த பயிற்றுநர் குழு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

குடும்பச் சூழல், கல்வி, பணம் வசதி இவை அனைத்தையும் கடந்து புத்தாக்க சிந்தனை தற்போதைய காலகட்டத்தில் மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது. கல்விக்கு வயது தடையில்லை சாதிக்கக் கால வரையறை இல்லை, எதையும் முடிக்கும் சிந்தனையும் ஆற்றலும் அதற்கான வழிமுறையும் நமக்கு இருந்தால் இளம் பெண்கள் நிச்சயம் வெற்றி காணலாம் என மனிதவள மேம்பாட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன