வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி-யில் புத்தம் புதிய திரைப்படங்கள்
மற்றவை

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி-யில் புத்தம் புதிய திரைப்படங்கள்

அண்மையில் திரையரங்களில் வெளிவந்த திரைப்படங்கள் ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி (அலைவரிசை 241) -இல் கண்டு மகிழலாம். அவ்வகையில் இந்தவொரு விளம்பர இடைவெளியின்றி இம்மாதம் கொரில்லா, கொளஞ்சி, ஜீவி மற்றும் வெண்ணிலா கபடி குழு 2 ஆகிய திரைப்படங்களைக் கண்டு களிக்கலாம். இத்திரைப்படங்கள் ஆன் டிமாண்ட் சேவையிலும் இடம்பெறும்.

கொரில்லா
இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் நடிகர் ஜீவா, சாலினி பாண்டே, ராதா ரவி யோகி பாபு மற்றும் சதீஷ் நடித்த ‘கொரில்லா’ திரைப்படத்தைத் தற்போது ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி-யில் கண்டு மகிழலாம்.

இத்திரைப்படத்தில் சிறிய சிறிய திருட்டு வேலை செய்து ஜீவா தன்னுடைய வாழ்க்கையை ஓட்டி வருகின்றார். அவருடன் வேலையிழந்த சதீஷ், நடிகராக வேண்டும் என்று குறிக்கோளாக இருக்கும் விவேக் ப்ரசன்னா, வீட்டின் கீழேயே வங்கியில் லோன் கேட்டு அழையும் ஒரு விவசாயிம் உள்ளார்.

நால்வரும் இணைந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றார்கள். ஒரு நாள் எதிர்ப்பார்த்தப்படியே வங்கியில் கொள்ளையடித்து விட்டு திரும்பும் போது இவர்களுடன் வந்த சிம்பன்ஸி அபாய பட்டனை அழுத்த போலிஸார் இவர்களைச் சுற்றி வளைக்கின்றனர். பிறகு இவர்கள் மாட்டினார்களா? இல்லை வெற்றிகரமாக பணத்தை வெளியே கொண்டு வந்தார்களா என்பதுதான் கதையாகும்.

கொளஞ்சி

தனராம் சரவணன் இயக்கத்தில் பள்ளியில் படிக்கும் கொளஞ்சி என்கிற மாணவனை சுற்றி நடக்கும் கதைதான் கொளஞ்சி. இத்திரைப்பட்டம் அப்பா மற்றும் மகன் இடையிலான உறவு, காதல், காமெடி எனப் பல விஷயங்கள் கலந்து மிகச் சுவாரஸ்யமாக நகருகின்றது.

தன்னுடைய மூத்த மகனான கொளஞ்சியின் சேட்டையை கண்டிக்கும் தகப்பனாக நடிகர் சமுத்திரகனி வலம் வருக்கிறார். சமுத்திரகனியின் கண்டிப்பைக் கண்டு கோபம் அடையும் கொளஞ்சி, தாயையும் தந்தையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். தாயுடன் சுதந்திரமாக இருக்க கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி குடும்பத்தைப் பிரித்துவிடுகிறான்.

நாட்கள் கடக்க பிறகு தான் செய்தது தவறு என்பதை உணருகின்றான். பிரிந்த குடும்பம் எப்படி ஒன்று சேர்க்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி-யில் கொளஞ்சி திரைப்படத்தைக் கண்டு களிக்கயுங்கள். இத்திரைப்படத்தில் சமுத்திரகனி, சங்கவி, கிருபாகரன், நசாத் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

ஜீவி

வலுவான கதை, திறமையான நடிகர்கள் மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை என ஒரு திரில்லர் ஹிட் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது ஜீவி. சொந்த ஊரில் கெத்தாக திரிந்து கொண்டிருந்த வெற்றியின் வாழ்வை அப்படியே புரட்டிப் போடுகிறது சென்னை.

ஊரில் இருந்து சென்னைக்கு வந்து டீ கடையில் வேலை செய்கிறார். இவருடன் பணிபுரியும் கருணாகரனுடன் ஒரே வீட்டில் தங்கி வேலை பார்க்கிறார். எதிர் கடையில் வேலை பார்க்கும் மோனிகாவுடன் வெற்றிக்கு காதல் மலர, பணத்தை காரணம் காட்டி வெற்றி விட்டு செல்கிறார் மோனிகா.

இந்த நிலையில் தான் வெற்றியும், கருணாகரனும் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் ரோகினி, தனது மகள் திருமணத்திற்கு வாங்கி வைத்து நகைகளை வெற்றி திருடுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது தான் ஜீவியின் சுவாரஸ்யமான கதையாகும்.

வெண்ணிலா கபடி குழு 2

விக்ராந்த் – கல்லூரி மாணவி அர்த்தனா பினு இருவரும் காதலிக்காகத் தொடக்க இந்த காதலுக்கு அர்த்தனாவின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். விக்ராந்தின் தந்தை தனக்கு பிறகு மகனை கபடி வீரனாக்கிவிட வேண்டும் என்பது ஆசையாகும்.

ஏற்கெனவே கபடி மீது நாட்டம் இல்லாத விக்ராந்துக்கு கபடி மீது ஈர்ப்பு வருகிறதா? தந்தையின் கனவை நனவாக்கினாரா? அர்த்தனா பினு மீதான காதல் என்ன ஆனது? இத்தனைக்கும் விடை தருகிறது ‘வெண்ணிலா கபடி குழு 2’ திரைப்படம். இயக்குனர் செல்வ சேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு செல்வகணேஷ் இசையமைத்துள்ளார்.

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி (அலைவரிசை 241) -இல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு புதிய திரைப்படம் ஒளியேறும். இப்பொழுதே இந்த அலைவரிசையை வாங்கி இத்திரைப்படங்களைக் கண்டு மகிழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன