வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > காடுகளில் 6 வெப்ப பகுதிகள்; காற்றுத் தூய்மைக்கேடு காரணம் அல்ல
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

காடுகளில் 6 வெப்ப பகுதிகள்; காற்றுத் தூய்மைக்கேடு காரணம் அல்ல

புத்ராஜெயா, செப்டம்பர் 19-

தீபகற்ப மலேசியாவில் உள்ள வனப் பகுதிகளில் 6 வெப்ப பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு தற்போது நாட்டில் நிலவி வரும் காற்றுத் தூய்மைக்கேடு பிரச்சனை காரணம் அல்ல என நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள் படத்தை பார்வையிட்டு அதன் வாயிலாக மலேசிய வனவியல் துறை தீபகற்ப மலேசியாவில் உள்ள காடுகளில் ஆறு பகுதிகள் வெப்பம் சூழ்ந்த பகுதிகள் என அறிவித்துள்ளது. ஜோகூரில் மூன்று பகுதிகளும் பகாங்கில் இரண்டு பகுதிகளும் திரங்கானுவில் ஒரு வனப்பகுதியிலும் அதிக வெப்பம் சூழ்ந்துள்ளதாக வனவியல் துறை கண்டறிந்துள்ளது.

அதிக வெப்பம் சூழ்ந்துள்ள வனப்பகுதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டில் நிலவும் காற்றுத் தூய்மைக் கேட்டின் காரணமாக இது ஏற்படவில்லை. என தமது அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சேவியர் ஜெயக்குமார் மேற்கண்டவாறு கூறினார்.

தீபகற்ப மலேசியா மட்டுமின்றி சபா சரவாக்கில் உள்ள அனைத்து மாநில வனவியல் துறையும் அதிக சூடான வனப்பகுதியை அடையாளம் காண்பதோடு தீ விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு கண்காணிப்பு நடவடிக்கையையும் தொடர வேண்டுமென சேவியர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

வெப்பமான வனப்பகுதியை கண்காணிப்பதற்கும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பதற்கு சிறப்புக்குழு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்ட வெப்பமான பகுதிகளில் கனிம மற்றும் புவி அறிவியல் துறையின் ஒத்துழைப்புடன் குழாய் கிணறுகளும் கட்டப்பட்டுள்ளன. தற்போது 85 குழாய் கிணறுகள் உள்ளன என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன