வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > காற்றுத் தூய்மைக்கேட்டினால் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்-மனிதவள அமைச்சு வலியுறுத்து
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

காற்றுத் தூய்மைக்கேட்டினால் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்-மனிதவள அமைச்சு வலியுறுத்து

கோலாலம்பூர், செப்டம்பர் 19-

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள காற்றுத் தூய்மைக்கேட்டினால் தொழிற்சாலைகள் அனைத்தும் தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களின் உடல்நலத்தில் அதிகம் அக்கறை கொள்ள வேண்டும் என்று மனிதவள அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

ஒரு தொழில்த்துவத்தின் முதன்மை பொறுப்பானது தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது ஆகும். ஆகையால், வேலையிடங்களில் தூய்மைக்கேட்டினால் எவ்வாறான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று முதலாளிகள் இடர் மதிப்பீடு செய்யவேண்டும்.

இச்சூழலில் முதலாளிமார்கள் தொழிலாளர்களின் வேலைக் கடினத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வேலை பலுவை குறைக்க வேண்டும்.

தொழிற்சாலைகள் ஆபத்தை அடையாளம் காணும் இடர் மதிப்பீடு, இடர் கட்டுப்பாட்டு வழிகாட்டியை பின்பற்றுவதுடன் இந்த புகைமூட்டம் அபாயத்தக்க நிலைக்கு அடைந்துவிட்டால், தொழிலாளர்களை கட்டுப்பாடுகள் இன்றி வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

இது குறித்து, இவ்விவகாரம் நேற்று அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.

இதன் அடிப்படையில் வேலை ஒப்பந்தகளைத் தவிர்த்து தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளை வேறு இடங்களில் இருந்து வேலைச் செய்யும் சூழல் ஏற்பட்டால், அவர்கள் வேலையிடத்தை மாற்றிக் கொள்ளலாம். இதனால் மலேசிய தொழிலாளர் சட்டம் அவர்களுக்கு எந்த தடையும் விதிக்காது.

உதாரணத்திற்கு, புகைமூட்டம் அல்லது வெள்ளப் பேரிடர் ஏற்பட்டால் அந்த சூழல் சரியாகும் வரை தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை தற்காலிகமாக வீட்டிலிருந்தே செய்யலாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

புகைமூட்டத்தினால் பாதிப்படையும் தொழிலாளர்களின் நலன் கருதி, அதிகம் அபாயத்தை எதிர்நோக்கும் தொழிற்சாலைகளின் மீது தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சட்டத்தின்கீழ்படி 1994 (OSHA), தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை (DOSH) உடனடியாக அந்த தொழிற்சாலையின் பணிகளை நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்.

அவர்களின் சட்டத்திற்கு இணங்காமல் முதலாளிமார்கள் அவர்களின் தொழிலாளர்களை தொடர்ந்து பணியில் ஈடுபட வைத்தால் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சட்டத்தின்கீழ் முதலாளிமார்களுக்கு வெ.50,000 அபராதமும் அல்லது 5 அல்லது சிறை தண்டனையும், அல்லது இரண்டுமே விதிக்கப்படும். மேலும், ஒரு நாள் வெ.500 அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புகைமூட்டத்தின் அதிகரிப்பு அபாயத்தக்க நிலையில் இருப்பதால், தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் கருதி, அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்கள் பின்வரும் குறிப்புகளை தொழிற்சாலைகள் தொடங்கவேண்டுமென்று அறிவித்துள்ளது.

  • பாதிப்புடைய தொழிலாளர்களை அடையாளம் காணவேண்டும் (குறிப்பாக இருதயம் மற்றும் சுவாச நோய் உள்ளவர்கள்)

  • புகைமூட்டம் தொடர்பான அறிகுறிகள் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவதற்கு ஆலோசனை வழங்க வேண்டும்  (அறிகுறிகள் : தொண்டை அரிப்பு மற்றும் இருமல், கண் எரிச்சல் சலி மற்றும் தும்மல்;தோல் அரிப்பு; சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல்)

  • எந்த வகையான வேலையென்று அடையாளங்காண வேண்டும், (புகைமூட்டம் அதிகமாக இருந்தால் வெளிப்புற வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.)

  • வெளிப்புற வேலைகளை நிறுத்துவதற்கான நிபந்தனைகளை தீர்மாணிக்க வேண்டும்.

  • வெளியில் வேலை செய்ய வேண்டிய தொழிலாளர்களுக்கு சுவாச பொருத்தம் சோதனை நடத்த வேண்டும்.

  • தொழிலாலர்களுக்கு போதுமான N95 சுவாச கவசம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • வேலையிடங்களில் காற்றுதூய்மைக்கேட்டைக் குறைப்பதற்கு தேவையான கருவிகளை அதிகரிக்க வேண்டும்.

  • தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடன் புகைமூட்டம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் முறையை செயல்படுத்த வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன