வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > பாலிஒன் எச்டியில் பிரபல பாலிவூட் கலைஞர்களின் திரைப்படங்கள்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பாலிஒன் எச்டியில் பிரபல பாலிவூட் கலைஞர்களின் திரைப்படங்கள்

பாலிவூட் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் இம்மாதம் ஆஸ்ட்ரோ பாலிஒன் எச்டி அலைவரிசை 251-இல் தி பாஸ்ட் (The Past), India’s Most Wanted, டி டி பியார் தே (De De Pyaar De) மற்றும் நோட்புக் (Notebook) ஒளியேறுகின்றது.

தி பாஸ்ட் (The Past)

ஒரு நாள் நெக்ஸஸ் பப்ளிகேஷன் உரிமையாளர் யுவராஜ் நாவலாசிரியரான சிம்ரன் அழைத்து தனது வாழ்க்கை வரலாற்றை எழுதச் சொல்கிறார். சிம்ரன் அந்த வேலையை ஏற்றுக் கொண்டு, தனது சகோதரி ஆலியாவுடன் லோனாவாலாவுக்கு விடுமுறைக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் தங்கும் பங்களாவில் அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்வுகின்றது. அதை வேளையில், அந்தப் பங்களாவில் கொல்லைப்புறத்தில் விலை மதிக்க முடியாத சொத்துகள் புதைக்கப்பட்ட ரகசியங்கள் வெளிபடுகின்றது. அதுமட்டுமின்றி, சிம்ரன் உடலுக்குள் ஆவி புகுந்து பல உண்மைகள் வெளிபட தொடங்குகின்றது. இத்திரைப்படத்தில் வேதிதா பிரதாப் சிங், சமிக்ஷா பட், யுவராஜ் பராஷர், ராஜேஷ் சர்மா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

India’s Most Wanted
பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘India’s Most Wanted’ திரைப்படத்தை ‘No One Killed Jessica’ திரைப்படப் புகழ் இயக்குநர் ராஜ் குமார் குப்தா இயக்கத்தியுள்ளார். சமீப காலங்களிலில் பல இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பயங்கரவாதிகளை மையப்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாட்டிற்கு குந்தகம் விலைவிக்கும் வகையில் பயங்கராவாத செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளைப் பிடிக்கும் குழுவிற்கு தலைமைத் தாங்குபவராக அர்ஜூன் கபூர் நடித்துள்ளார்.

டி டி பியார் தே (De De Pyaar De)
அஜய் தேவ்கன், தபு மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்த டி டி பியார் தே 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த பாலிவுட் திரைப்படங்களின் பட்டியலில் அடங்கும். திருமணமாகிய 50 வயது நிரம்பிய ஆடவர் 26 வயது இளம் பெண்ணைக் காதலிக்கிறார். அந்தக் காதலுக்கு அவரது குடும்பத்தினரிடமிருந்தும் முன்னாள் மனைவியிடமிருந்தும் மறுப்பை எதிர்கொள்கிறார். பல சிக்கல்களுக்குப் பிறகு அஜய் தேவ்கன் தன்னுடைய முன்னாள் மனைவியாக வலம் வரும் தபு அல்லது ரகுல் ப்ரீத் உடன் சேர்கிறாரா என்பதை இத்திரைப்படத்தைக் கண்டு அறிந்து கொள்ளுங்கள்.

நோட்புக் (Notebook)
கதாநாயகன் கபீர் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறான். இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றும் போது மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று அப்பணியிலிருந்து அவர் விலகிச் செல்கிறார். தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்று அங்கு அவர் தந்தையால் நிறுவப்பட்ட “வுலர் பப்ளிக் ஸ்கூல்’ மோசமான நிலையில் இருப்பதை அறிந்து அங்கே ஆசிரியராக பணியாற்றுகிறார். அந்தப் பள்ளியில் பல இன்னல்களை ஏற்பாடுகின்றது. மனம் நொந்து போன கபீருக்கு வகுப்பறையின் மேசையில் ஒரு நோட்டு புத்தகம் கிடைக்கிறது. அப்புத்தகத்தில் அப்பள்ளியில் பணியாற்றிய பிர்தெளஸ் அனுபவங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு வார்த்தையும் கபீருக்கு ஆறுதலளிக்கின்றது. பிறகு, கபீர் எவ்வாறு இப்பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் என்பது கதையாகும்.

ஆஸ்ட்ரோ பாலிஒன் எச்டி அலைவரிசை 251-இல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9 மணிக்கு புதிய திரைப்படம் ஒளியேறும். இத்திரைப்படங்களை ஆன் டிமாண்ட் சேவையிலும் கண்டு மகிழலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன