வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஆள் பற்றாக்குறையால் உலக மறுசுழற்சி தொழில் பெரும் பாதிப்பு! – டத்தோஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஆள் பற்றாக்குறையால் உலக மறுசுழற்சி தொழில் பெரும் பாதிப்பு! – டத்தோஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி

கோலாலம்பூர் செப். 21-

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மறு சுழற்சி தொழில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகின்றது என மலேசிய இந்தியர் உலகம் மறுசுழற்சி சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இந்தத் தொழிலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு 7000 ஆயிரம் அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும் அதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சங்கத்தின் 22 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டபோது

இந்த நாடு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதற்கு அடிப்படையான தொழில் மறுசுழற்சி ஆகும். 1958ஆம் ஆண்டுப் பினாங்கு மாநிலத்தில் இத்தொழில் தொடங்கப்பட்டது. பின்னர் 1972 ஆம் ஆண்டு தலைநகர் தொடங்கிப் பல பகுதிகளில் இத்தொழிலில் இந்தியர்கள் ஈடுபடத் தொடங்கினார்கள். சுகாதாரப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு மறுசுழற்சி என்பது அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்து இருக்கின்றார்கள். ஆனால் இத்தொழிலை முன்னெடுப்பதற்கு ஆள் பற்றாக்குறை நிலவுகின்றது.

அதை முறைப்படுத்தத் தவறினால் வரும் காலங்களில் இத்தொழிலில் யாரும் ஈடுபட மாட்டார்கள் என டத்தோஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி கூறினார். அதேபோல் உலகம் மறுசுழற்சி தொழில் இல்லாமல் போனால்தான் இதில் இருக்கும் பின்விளைவுகள் என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்வார்கள். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாடு குப்பை மேடாக மாறக் கூடாது என்பதற்காக இந்தத் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். மிக முக்கியமாக இது கடுமையான தொழில் என்பதால் மலேசியர்கள் பணியாற்றுவதற்கு விரும்புவதில்லை. அதனால் அந்நியத் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களில் ஒரு பகுதியினர்

2008 ஆம் ஆண்டு உலகம் மற்றும் மறுசுழற்சி துறைக்காக 7000 அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது. இப்போதும் எங்களுக்கு அதே எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆள் பற்றாக்குறை சிக்கலால் இதுவரையில் 15 விழுக்காட்டு பேர் இந்தத் தொழிலில் இருந்து விலகி விட்டார்கள்.

அதோடு தொழிலாளர்களை மாற்றிக்கொள்ளும் திட்டத்தை மனிதவள அமைச்சு அறிவித்திருந்த போதும் அதனை செயல்படுத்துவது மிகப்பெரிய சிக்கலாக உள்ளது என கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். பலமுறை இதற்கு விண்ணப்பம் செய்த போதும் இதுவரையில் எந்த முறையான பதிலும் கிடைக்கவில்லை. அரசு அனுமதி வழங்கினாலும் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையால் அந்நியத் தொழிலாளர்களை மாற்றிக்கொள்ளும் திட்டமும் வெற்றியடையவில்லை என்றார் அவர்.

உலோகம் மற்றும் மறுசுழற்சி சங்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. தற்போது 560 உறுப்பினர்கள் இச்சங்கத்தில் இருக்கின்றார்கள். அவர்களின் ஏற்றமிகு எதிர்காலத்திற்கு வித்திடும் வகையில் அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்க வேண்டுமென டத்தோஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் 200க்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அதோடு சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ சரவணன், உதவித் தலைவர் முத்தழகன், டத்தோ எஸ்.எம். முத்து உட்பட மலேசிய இந்திய வர்த்தகச் சங்கங்களின் சம்மேளனம் மைக்கின் தலைவர் கோபாலகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன