ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > வீட்டை கொளுத்திய ஆடவர்கள்: அதிர்ச்சியில் இந்திய மாது மரணம்! புந்தோங்கில் பரபரப்பு
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

வீட்டை கொளுத்திய ஆடவர்கள்: அதிர்ச்சியில் இந்திய மாது மரணம்! புந்தோங்கில் பரபரப்பு

புந்தோங், செப்டம்பர் 23-

இங்குள்ள நியூ டெல்லி சாலையில் அத்துமீறி நுழைந்து வீட்டிலுருந்த 3 மோட்டார் சைக்கிள்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொளுத்தினார்கள். இந்தச் சம்பவத்தின்போது வீட்டிலிருந்த இந்திய மாது அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அதிர்ச்சியில் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் ஈப்போவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 அளவில் அபிராமி (வயது 44) என்ற குடும்ப மாது வீட்டில் இருந்த சமயத்தில் தமது மூத்த மகனை கேட்டு நால்வர் வீட்டிற்குள் நுழைந்தது வீட்டில் இருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களைக் கொளுத்தியுள்ளார்கள்.

இந்தச் சம்பவம் நடந்தபோது வீட்டில் தனது தாயும் 3 தங்கைகளும் மட்டுமே இருந்ததாக அபிராமியின் மூத்தமகன் நினிஸ்வரன் (வயது 29) கூறியுள்ளார். இரவு 7 40 மணி அளவில் தமது தங்கை தொடர்பு கொண்டு அம்மா மயங்கி விழுந்து விட்டார் என்ற தகவலை கூறியவுடன் தான் வீட்டிற்குச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

வீட்டில் நுழைந்த ஆடவர்கள் மோட்டார் சைக்கிள் மட்டுமின்றித் தமது தங்கையின் கார் கண்ணாடியையும் உடைத்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு விரைந்து தமது தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்திய கூறியவர், அச்சமயத்தில் பக்கத்து வீட்டுக்காரர் தம்மைக் தொடர்புகொண்டு வீடு தீப்பிடித்து எரிவதாகக் கூறியதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார்.

30 ஆண்டுக் காலமாகத் தாங்கள் இப்பகுதியில் வசித்து வருவதாகவும் இதுவரையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது இல்லை எனக் குறிப்பிட்டார். தங்களைத் தாக்கிய கும்பல் மீண்டும் வருவோம் என மிரட்டி விட்டுச் சென்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.

புந்தோங் பகுதியில் வீடு, மோட்டார் சைக்கிள்கள் எரியும் காணொளி நேற்று இரவு சமூகத் தளங்களில் வைரலாகப் பரவியது. இந்தச் சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை நடத்துவதாகப் பேரா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன