ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > இந்தோனேசியாவில் அவசரகால பிரகடனம்..!
உலகம்முதன்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் அவசரகால பிரகடனம்..!

காட்டுத் தீயினால் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வரும் இந்தோனேசியாவின் ரியாவ் பகுதியில்
அவசர காலம் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.

அப்பகுதியின் காற்றுத் தூய்மைக்கேட்டின் குறியீடு 500–யும் கடந்து இருப்பதால் புகை மூட்ட அவசர காலம் பிரகடனமாகியுள்ளது.

இந்த அவசர காலப் பிரகடனம் திங்கட்கிழமை முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொது மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அப்பகுதி மக்களை தற்காலிக மீட்பு மையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டிருக்கின்றன.

காட்டுத் தீயின் காரணத்தால் ஏற்பட்டிருக்கும் புகை மூட்டம், ரியாவ் மாநிலத்தை ஆரோக்கியமற்ற நிலையில் வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பெக்கான் ராபு மற்றும் ஜாம்பியில் வசிக்கும் 280  மலேசிய மாணவர்கள் அங்கிருந்து விரைவில்  வெளியேற்றப்படவுள்ளதகா மலேசிய தேசியப் பேரிடர் நிர்வகிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 160 பேர் மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பப்படுவதாகவும்  மீதமுள்ள 120 மாணவர்கள், ஜகார்த்தாவில் பத்திரமாக தங்கவைக்கப்படுவதாவும் அது அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன