வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > வீட்டைக் கொளுத்திய ஆடவர்கள் கைது..!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

வீட்டைக் கொளுத்திய ஆடவர்கள் கைது..!

புந்தோங், செப்டம்பர் 24-

இங்குள்ள நியூ டெல்லி சாலையில் அத்துமீறி நுழைந்து வீடோன்றுக்கும் நான்கு வாகனங்களுக்கும் தீ வைத்து குற்றச் செயலில் செயலில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் மூவரை போலீசார் கைதுச் செய்திருக்கின்றனர்

இந்த குற்றச் செயலை புரிந்த அவர்கள் 25 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என்று, ஈப்போ மாவட்ட போலீசார் கூறியுள்ளனர்.

அந்த மூன்று ஆடவர்களின் கைது செய்வதன் மூலம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை முழுமை செய்ய முடியும் என்று ஈப்போ மாவட்ட போலீசார் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 அளவில் அபிராமி (வயது 44) என்ற குடும்ப மாது வீட்டில் இருந்த சமயத்தில் தமது மூத்த மகனை கேட்டு நால்வர் வீட்டிற்குள் அத்துமீஇ நுழைந்து வீட்டில் இருந்த வாகனங்களை கொளுத்தியுள்ளார்கள்.

இந்தச் சம்பவத்தின்போது வீட்டிலிருந்த இந்திய மாது அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அதிர்ச்சியில் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் ஈப்போவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கவனக்குறைவால் மரணமடையச் செய்தது அல்லது நோக்கமில்லாமல் கொலைச் செய்தக் குற்றத்திற்காக, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 304-கின் கீழ் இச்சம்பவம் விசாரணைச் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன