நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019!

வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டியின் பிரமாண்டமான பரிசளிப்பு விழா வருகின்ற 05 அக்டோபர் 2019 மாலை 3.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரை நமது சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக மைய அரங்கில் நடைபெறவுள்ளது.

இம்மரபு கவிதைப் போட்டியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மலேசியக் கவிஞர்கள் பங்குபெற்றுச் சிறப்பித்தனர். தொடர்ந்து, மலேசியா இலக்கியத் துறையில் சாதனை படைத்தவருக்கு இலக்கிய விருதும் வழங்கப்பட உள்ளது.

எனவே,பல்கலைக்கழக மாணவர்களையும், பேராசிரியர்களையும், மலேசியா கவிஞர்களையும் அழைத்து வெற்றிக்கு ஒரு விழாவாக மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

ஒற்றைக் கைதட்டினால் ஓசை பெருகிடுமோ தோழர்களே, திரளாக வந்து தமிழனின் வெற்றிக்குக் கைதட்டுங்கள்.

1 COMMENT

  1. இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளால் நம்மினத்தோர்க்குள்ள மொழிப்பற்று மேலும் பெருகுவதோடு மெருகேறி, புதிய சிந்தனைகள் இலக்கியப் பிரவாகமாக உருப்பெற்று , சிம்மாசனம் அமரும் என்பது திண்ணம்.

Comments are closed.