ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > நல்லவனும்…! வல்லவனும்…!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

நல்லவனும்…! வல்லவனும்…!

பிக்பாஸ் வீட்டில் ஒரே வாரத்தில் இரண்டு அதிர்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தன. ஒன்று கவின் 5 லட்சத்துடன் வெளியேறியது. மற்றொன்று இறுதி சுற்றுக்கு தகுதிப் பெறாமல் தர்ஷன் குறைந்த வாக்கினால் வெளியேற்றப்பட்டது. இந்த இருவருக்குமே தனித்தனியான நல்ல குணங்களும் பண்புகளும் இருந்த போதிலும், பிக்பாஸ் வீடு அதனை அசைத்துப் பார்த்து ஒரு கபடி ஆட்டமே ஆடி இருக்கிறது. அவற்றை சற்று அலசி பார்க்கிறது அநேகனின் இந்த கட்டுரை.

கவின் : நல்லவன்

1. பிக்பாஸ் வீட்டில் மட்டுமில்லாமல் வெளியிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட பெயர் கவின்தான். அந்த வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது எதுவானாலும் அது எப்போதும் கவினை சுற்றியே படியே இருந்தது.

2. பிரபலமாக பேசப்பட்ட ‘சரவணன் மீனாட்சி ‘ சீரியலில் தாம் செய்த வேட்டையன் கேரக்டர் போல் வீட்டுக்குள் ஜாலியாக இருந்தால், மக்களுக்கும் பிடிக்கும் என்று அவர் போட்ட தப்பு கணக்கு ரியலிட்டியில் பூகம்பமாக அமைந்து போனதை தைரியமாய் ஓப்புக்கொண்டு, சாக்‌ஷி, கமல், மக்கள் என்று அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டார்.

3. அபிராமிக்கு தம் மீது நாட்டம் இருக்கிறது என்று தெரிந்தும் கண்ணியமாக விலகி நின்ற கவின், சாக்‌ஷியுடன் சற்று நெருங்கி பேசத் தொடங்கினார். அது இருவருக்கும் இடையில் சின்ன பொறாமை என்ற உணர்வில் தொடங்கி பெரிய பிரிவில் கொண்டு போய் சேர்த்தது. ஒரு பெண்ணின் மனதில் ஆசை வரும் அளவிற்கு கவின் பேசியது மறுக்க முடியாத குற்றம்தான். இருவருக்கும் இதில் சரிபாதி பொறுப்பு இருந்தாலும், உலகம் கவினை மட்டுமே குறை சொல்ல தொடங்கியது.

4. பிக்பாஸ் வீட்டில் நீங்கள் நீங்களாக இருங்கள், கேமராவுக்காக நடிக்காதீர்கள் என்று கூறிக்கொண்டே இருக்க, கவினும் லொஸ்லியாவும் வாழத் தொடங்கியதுதான் அங்கு மக்களுக்கு குற்றமானது. ஏதோ ஒரு புள்ளியில் கவினுக்கும் லொஸ்லியாவுக்கும் இடையே இருந்த நட்பு ஈர்ப்பாகி போனது. எந்த சூழ்நிலையிலும் தம்மை விட்டுகொடுக்காமல் இருந்த ஒரு உறவாக லொஸ்லியா கவினை பார்த்தாள். நல்லதும் கெட்டதுமாக கலந்து வெளிப்படையாக இருக்கும் தமக்கு, லொஸ்லியா துணையாக இருந்தது கவினுக்கு பிடித்தது. பெட்டரி கலற்றியதைத் தவிர, அந்த வீட்டுக்குள் எல்லை மீறாமல் ஒருவருக்கொருவர் அன்புடன் விட்டுக்கொடுத்து நின்றனர்.

5. அந்த உணர்வு கடைசிவரை தொடருமா என்ற போராட்டம் இருவருக்குள் இருந்ததால், அடிக்கடி பேசவும் நேர்ந்தது. அதனை சேனலின் டி.ஆர்.பிக்கு இரையாக்கிக்கொண்டு, அவர்களை மட்டுமே ப்ரோமோவில் வெட்டி காட்டியது. இதனால் மக்களும் சளிப்பு அடைந்தார்கள். பலரும் வெறுத்தார்கள்.

6. இடையில், இவர்கள் விவகாரத்தில் சேரன் நல்லது நிறையவே கூறினாலும், அதனை வைத்தே அவரும் கேம் ஆடுகிறாறோ என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றியது. இருந்தும் வயது, அனுபவம், பெரியவர், அப்பா என்ற கோணங்களில் அங்கே மீண்டும் கவினே வில்லனாகும் நிலை. மரியநேசன் உள்ளே வந்த போது நிலைகுலைந்து போனார் கவின். அந்த அப்பாவின் கோபம் நியாயம். அந்த கோபங்களுக்கு கவின் பொறுப்பேற்கதான் வேண்டும்.

7. கவின் டாஸ்க் செய்யவில்லை என்று கூறவே முடியாது. எல்லா டாஸ்குகளையும் செய்தார். ஆனால் அதனை எதிலும் வெல்ல முடியாமல் நின்றார். அதனால் விமர்சனத்தில் சரிவும் கண்டார். கவின் செய்த வேலைகளைவிட, அவர் ஆரம்பத்தில் செய்த லீலைகளையே வீட்டில் உள்ளவர்கள் காரணமாக சொல்லி வெளியேற்ற நினைத்தனர்.

8. இப்படி கவினை மீண்டும் மீண்டும் குறை கூறினாலும், தப்பு தவறுக்கும் மன்னிப்பு கேட்டு நேர்மையாக மனிதர்களை அணுகிய பண்பு ஒரு பக்கம் மக்களை கவர்ந்தது. அதுவே ஒவ்வொரு வாரமும் கவினுக்கு ஓட்டாக சேர்ந்தது. கூடவே வீட்டுக்கு வெளியே நின்ற குடும்ப பிரச்சனை, நண்பன் கொடுத்த, அறை,  இப்படி அனுதாபமும் கவின் மீது பிறந்தது.

9. தமது தேவைக்கு பணம் வேண்டும் என்று வந்த கவின், இலங்கை மண்ணில் தர்ஷ்னுக்கு நடந்த கொடுரங்களை கண்டு, தம்மை விட அவனே வெற்றி பெற வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்த அவரின் பரந்த பண்பு இன்னும் கவரத் தொடங்கியது. போட்டியை போட்டியாக பார்க்க வேண்டும் என்று, வீட்டுக்கொடுக்க இது இடம் அல்ல என்று வனிதா, சேரன், கமல் என்று இன்னும் பலர் விமர்சனங்கள் செய்ய, அதுவும் அவருக்கு தப்பாகிவிடுமோ என்ற அச்சதில் கெட்டவனாக வாய் மூடும் நிலை வீட்டில். WE ARE THE BOYS என்ற, தம் நண்பர்களையும் விட்டுக்கொடுக்காமல், நாமினேஷனில் அவர்கள் பெயரை கடைசிவரை சொல்லாமல், நட்பை நேசிக்கும் இளைஞர்களின் இதயங்களில் இடம் பிடித்தார் கவின்.

10. தம்மால் தான் லொஸ்லியாவுக்கு கெட்ட பெயர். போட்டி இருக்கும் இடத்தில் தனுத்தனியாய் நட்புக்குள் மனகசப்பு வந்தது. அதுவே தர்ஷனுக்கும் கவினுக்கு இடையில் கருத்து வேறுப்பாட்டை கொண்டு சேர்த்தது. சேண்டிக்கும் கவினுக்குமான ஊடல் இப்படி நிறைய போக. அத்தனையும் உள்ளுக்குள் குழப்பி வைத்து வெளியில் சிரித்த பண்பே, கவினை, கேம் என்பதைவிட ரியலிட்டியில் மக்களின் மனங்களில் இன்னும் ஆழமாக கொண்டு வைத்து.

11. தகுதியே இல்லாத தாம் உள்ளே இருப்பதைவிட தகுதி உள்ளர்வர்கள் ஜெய்க வேண்டும் என்ற எண்ணதில், தாம் வெற்றி பெற வாய்ப்பிருந்தும்  தருணத்திற்காக காத்திருந்து வெளியேறினார். ஒவ்வொரு வாரமும் தமது நேர்மையை மக்கள் பார்க்கின்றார்கள் அதற்கு நேர்மை செய்ய வெளியேறினேன் என்று கடைசியாக கவின் சொன்ன வார்த்தைக்கு மக்களின் ஆதரவு சொல்லியது கவினுக்கு இன்னொரு டைட்டல் தேவையில்லை என்று.  மக்கள் ஆதரவு தமக்கு இருக்கின்றதே என்ற கர்வத்தை ஒரு போதும் கவின் வெளிப்படுத்தியதும் இல்லை. ரியலிட்டி கேமில் உண்மையாக (ரியலாக) இருந்ததால்தான் கவினுக்கு நல்ல பெயரும் கெட்ட பெயரும் சேர்ந்தே கிடைத்தது.

12. தப்பு தவறுகள் செய்தாலும் தராசில் கவினின் நல்ல குணமே நிறைந்து உள்ளது. பணத்திற்காக சென்றான் என்று வாய்கள் பேசின. இறுதியில் அவன் குணமே ஜெயித்தது என்று, கமல் சொல்லாமல் சொல்லி முடித்தார். கவினின் ”நல்ல திட்டத்தை” சாக்க்ஷி, வனிதா, பாத்திமா, ரேஷ்மா என்று வீட்டில் உள்ளவர்கள் டிவீட் செய்து பாரட்டினர். நல்லவன் எத்தனை காயம் பட்டாலும் அவனது குணத்தில் இருந்து விலகமாக மாட்டான். கவின் வல்லவன் அல்ல நல்லவன்!

தர்ஷன் : வல்லவன்

1. தர்ஷன் முதல் அடி எடுத்து வைத்த அந்த நிமிடம் அவரை யாரென்று மக்களுக்கு தெரியாத தருணங்கள், புதிய இடம், புதிய களம், புதிய மக்கள், இந்தியாவுக்குள்ளே மட்டும்தான் ஓட்டுக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், இந்திய ரசிகர்கள் மனதை வென்று, அவர்கள் ஆதரவுடன் 98 நாட்கள் கடப்பது என்பது சுலபமான காரியம் அல்ல.

2. பார்வைக்கு மட்டுமின்றி உள்ளத்திலும் தர்ஷன் உயர்ந்தவர் என்று அனைவரிடமும் பழகும் விதம் காட்டியது. பெரும்பாலான நேரங்களில் வாய் திறக்காமல் இருந்த வேளையில், கமல் முன்னுக்கு வர சொல்லி கேட்டுக்கொண்ட பிறகு வனிதாவுக்கு எதிராக முதலில் வாய் திறந்தவர் தர்ஷன். அங்கிருந்து உயரத் தொடங்கியது தர்ஷன் கொடி.

3. ஜெயிக்க வேண்டிய இடங்களில் ஜெயித்து, அபிராமிக்கும் லொஸ்லியாவுக்கும் விட்டுக்கொடுக்க வேண்டிய இடங்களில் விட்டுக்கொடுத்து. ரசிகர்களில் மனங்களில் விட்டுக்கொடுக்காமல் இடம் பிடிக்கத் தொடங்கினார்.

4. கவினும் சேண்டியும் சரவணன் பக்கம் நிற்க, தர்ஷன் மட்டும் சேரன் பக்கம் நின்றார்.  அடுத்தவர் விட்டுக்கொடுத்து போடும் பிச்சை உனக்கு வேண்டுமா என்று வனிதா பற்ற வைக்க, அங்கிருந்து போட்டிகளில் இன்னும் பலம் மிக்க யானையாய் மாறினார் தர்ஷன். போட்டி என்றால் அங்கு நிச்சயம் ஜெய்ப்பது தர்ஷன் என்ற எண்ணமே வீட்டில் உள்ளவர்களுக்கும் வெளியில் உள்ளர்வர்களுக்கும் மேலோங்கியது.

5. கவின் லொஸ்லியா பேசுவதை ப்ரோமோவில் காட்டிய விஜய் டிவி தர்ஷன் செரின் பேசுவதையும் பழகுவதையும் அன்சீன் காட்சிகளில் வைப்பதாக நிறைய புகார்கள் சமூக வைத்தளங்களில் பரவின. குறிப்பாக, கவின் ஆர்மி இதனை வெளிப்படையாக எதிர்த்தனர்.

6. சமயங்களில், கவின் லொஸ்லியா பற்றி சேரன், தர்ஷனிடம் நிறைய குறைகள் சொல்ல அதற்கும் நியாயம் செய்ய இருப்பக்கமும் பேசும் நிலை நேர்ந்தது. அந்த வீட்டில் வாழும் அனைவருக்குமே இதே நிலை நேர்ந்தது ஏற்பட்டது. தங்கை என்று லொஸ்லிவை பாதுகாத்த போதும், அவளுடன் சில்லறையாய் சண்டையிட்ட போது தர்ஷன் அண்ணாவின் பாசம் அழகாய் இருந்தது.

7. செரின் மீதுள்ள அன்பால் சில இடங்களில், தர்ஷன் செரின் பக்கமே நின்றார். சமையல் அறை, சாப்பிடும் இடம், என்று தென்பட்டது. சில பிரச்சனைகளில் WE ARE THE BOYS குழுவில் தம்மால் சேரமுடியாத போதும், தர்ஷனுடன் பேச முடியாத போதும் கவலையில் இருந்த செரின் வனிதாவிடம் கூற. அதுவும் வெளிச்சமானது. வெளியில் காதலி இருந்தும் தர்ஷன் செரினுடன் இப்படி நடப்பது தவறு என்று சமூக வலைத் தளங்களும் பேசின.

8. இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு இருந்தாலும், அதனை வெளிப்படையாய் காட்டினாலும், டாஸ்க் என்று வரும்போது தர்ஷன் அதில் வெற்றி பெற்று மிளிந்ததால் சின்ன சின்ன விசயங்கள் நிறைய கணக்கில் வராமல் போயின. தோற்கும் இடங்களில் கோபமும் அடைந்தார்.

9. கவின் நட்வை வைத்து தந்திரம் செய்கிறார் என்று கூறிய தருணத்தில், கவின் ரசிகர்கள். தர்ஷன் மீது கோபம் அடைந்தனர். அதுவரை அவருக்கும் சேர்த்து வாக்களித்த நாங்கள் இனி வாக்களிக்க மாட்டோம் என்று இன்ஸ்டாவில் வெளிப்படையாய் தெரிவித்தனர்.

10. எப்படியும் தர்ஷன் ஜெயிக்க கூடும் என்ற நம்பிக்கையில், லொஸ்லியாவை தோற்கடித்து செரினை ஜெயிக்கவைக்க, அதிகம் வாக்குகள் செரினுக்கு போட்டதன் விளைவால் தர்ஷனுக்கு இந்த நிலை நேர்ந்திருக்குமோ என்று பல கணிப்புகள் கூறின.  அதோடு, இறுதியாக செரின் எழுதிய அந்த கடித விவகாரம் தர்ஷனுக்கு எதிராக திரும்பியதோ என்ற சந்தேகத்தையும் சில வலைப்பதிவுகள் வெளிப்படுத்தின.

11. இதுபோல விசயங்கள் நிச்சயம் தர்ஷனின் குறிக்கோளை தளர்த்திவிடவில்லை. போட்டி என்ற தராசில் வைத்தால் பிக்பாஸ் டைட்டல் நிச்சயம் தர்சனுக்குதான் சென்று சேர வேண்டும். ஆனால் அது இங்கு கை நழுவியதுதான் அபத்தமாகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் வருத்ததையும் ஏற்படுத்தி உள்ளது.  மக்கள் ஏன் தர்ஷனுக்கு வாக்களிக்காமல் போனார்கள்? இது தான் பெரிய கேள்விகுறி!!

12. ”இந்த போட்டில நான் ஜெயிக்கிறேனோ இல்லயோ, இப்படி ஒருத்தன் இங்க வந்துட்டு போனான்னு மக்களுக்கு தெரிஞ்சாலே எனக்கு போதும், அதுவே எனக்கு பெரிய வெற்றிதான்” இந்த நம்பிக்கை மிகுந்த வார்தைகள் தர்ஷனை இன்னும் உயர்த்துக்கு கொண்டு செல்லும். எந்த சூழ்நிலையையும் தனக்காக பயன்படுத்தி முன்னேறுபவன் என்பதாலே தர்ஷன் – வல்லவன்

நல்லதும் கெட்டதுமாக இந்த பிக்பாஸ் வீட்டில் இருவருமே மக்களை கவர்ந்தவர்கள். தர்ஷன் ஜெயித்து கவின் அதனைக் கைத்தட்டி பார்த்திருக்க வேண்டும். ஆனால் நிலமை வேறாகி முடிந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை (லண்டன்) PWC எனும் முன்றாம் தரப்பின் மேற்பாற்வையில் இருப்பதால் விஜய் டிவிக்கு இதில் தொடர்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன