ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பினாங்கில் பாதுகாப்பு விதிமுறைகளைப் பேணாத மேம்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பினாங்கில் பாதுகாப்பு விதிமுறைகளைப் பேணாத மேம்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!

பினாங்கு அக். 2-

பினாங்கு மாநிலத்தில் வீடமைப்பு கட்டுமானப் பணிகளின் போது, பாதுகாப்பு விதிமுறைகளைப் பேணாத மேம்பாட்டாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று, மாநிலத்தில் அத்துறையின் ஆட்சிக்குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெகதீப் சிங் டியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வீடமைப்பு கட்டுமானப் பணிகளின் போது, பாதுகாப்பு அம்சங்கள் அவசியம் கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனவும், இதனை அலட்சியமாகக் கருதாமல் ஒவ்வொரு மேம்பாட்டாளரும் இவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் இங்கிருக்கும் தஞ்சோங் பூங்கா பகுதியின் மலைப் பிரதேசத்தில் வீடமைப்பு கட்டுமானப் பணியின்போது நிகழ்ந்திட்ட நிலச்சரிவு சம்பவத்தை நினைவு கூர்ந்திருக்கும் அவர், அந்தப் பேரிடர் சம்பவத்தில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் பேணப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

இதன் பொருட்டு மாநிலத்தில் மலைப் பாங்கான இடங்களில் மேற்கொள்ளப்படும் வீடமைப்பு கட்டுமானப் பணிகளின் போது, பாதுகாப்பு அம்சங்களை நிலை நிறுத்துவது தொடர்பில், மாநில பாதுகாப்புத் துறைக்கும், நில விதிமுறை ஆய்வுக் குழுவுக்கும் உத்தரவிடப்பட்டிருப்பதை அவர் எடுத்துரைத்துள்ளார்.

வீடமைப்பு கட்டுமானப் பணி விவகாரங்களில் இத்தகைய பாதுபாப்பு அம்சங்கள் பின்பற்றப்படுவது தொடர்பில் தீரமான ஆய்வுகளை நடத்துவதற்கும் பணிக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கும் ஜெகதீப், மாநில மாநகராண்மைக் கழகம் சார்பில் இது குறித்து சிறப்புப் பொறியாளர் குழுவும் பணியமர்த்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன