ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மனோ, திவாகர் கலந்து கொள்ளும் உடல் பேறு குறைந்தவர்களுக்காக மாபெரும் நிதி திரட்டும் இசைநிகழ்ச்சி!
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மனோ, திவாகர் கலந்து கொள்ளும் உடல் பேறு குறைந்தவர்களுக்காக மாபெரும் நிதி திரட்டும் இசைநிகழ்ச்சி!

ரவாங் அக். 2-

உடல் பேறு குறைந்தவர்களை கொண்டிருக்கும் 8 அமைப்புகள் இணைந்து மாபெரும் நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாக மலேசிய மாற்றுத்திறனாளிகள் தன்னிலை பயிற்சி மையத்தின் தலைவர் ஜி பிரான்சிஸ் சிவா தெரிவித்தார்.

நிதிப்பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறிய அவர் இதற்கு பல நல் உள்ளங்கள் உதவிக்கரம் நீட்டி இருப்பதாகவும் தெரிவித்தார்.

அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30 தொடங்கி நள்ளிரவு 12 மணிவரை ஷாஆலம் மெலாவாத்தி அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் மனோ, சூப்பர் சிங்கர் புகழ் திவாகர், ரக்‌ஷிதா ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இவர்களுடன் மலேசியாவின் முன்னணி கலைஞர்களும் தங்களின் படைப்புகளை வழங்குவார்கள் என பிரான்சிஸ் சிவா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை ராகா அறிவிப்பாளர் உதயா தொகுத்து வழங்கி வருகின்றார். 20 வெள்ளி தொடங்கி இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. பொதுமக்கள் இதில் திரளாக கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அதோடு இந்த நிகழ்ச்சியின் மூலம் பெறப்படும் நிதிகள் 8 பேரு குறைந்த இல்லங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்பதையும் பிரான்சிஸ் சிவா உறுதிப்படுத்தினார்.

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் மேம்படுவது மிகக் கடினம் என்ற சூழல் நிலவும் நிலையில் அவர்களே அவர்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சியை இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்வது பாராட்டுக்குரியது என சந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குண ராஜ் கூறினார்.

அரசாங்கத்தை நம்பி இருக்காமல் அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கை வெற்றி பெற வேண்டும் என அவர் வாழ்த்தினார். பொதுமக்களும் இந்த நிகழ்ச்சிக்கு பிளவுபடாத ஆதரவை வழங்கினால் இந்த அமைப்புகள் பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடும் என்றார் அவர்.

மலேசிய பிரதர்ஸ் மோட்டார் சைக்கிள் அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு பிளவுபடாத ஆதரவை வழங்கும் என அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் தகவலையும் அவர் வெளியிட்டார்.

பொதுமக்கள் இதில் கலந்து கொள்வதன் மூலம் சமுதாய சேவையில் தங்களை இணைத்துக்கொள்ள முடியும் என டத்தோ ஸ்ரீ பாலகிருஷ்ணன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன