கோலாலம்பூர், அக், 2-

நீர் சேவைகள் தொழில் சட்டம் 2006 (வாசியா) கீழ் நீரை மாசுபடுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க இயற்கை வள அமைச்சு ஆய்வு செய்து வருவதாக நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் ஜெயக்குமார் கூறினார்.

தற்போது அபராதமாக 10 ஆயிரம் வெள்ளி மலேசிய ரிங்கிட் அல்லது ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படுவது போதுமானதாக இல்லை என அவர் குறிப்பிட்டார். “”பத்தாயிரம் வெள்ளி போதாது””. “”ஒரு வருட சிறை தண்டனை போதாது”” என சேவியர் குறிப்பிட்டார்

இந்த இரண்டு தண்டனைகளையும் அதிகரிப்பது பற்றியும் நீர் வளத்தை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை உடனடியாக மூடுவது குறித்தும் நாம் சிந்திக்க விருப்பதாக உலகளாவிய நீர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அனைத்தும் முறைப்படி நடந்தால் 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் அச்சட்டத்தை தாக்கல் செய்யப்படுமென அவர் கூறினார். நீரை மாசுபடுத்தும் நபர்கள் மீது தேசிய நீர் சேவை ஆணையம், இண்டா வாட்டர், ஆகிய நிறுவனங்கள் நீர் மாசு படுத்துவது தொடர்பாக விசாரணைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

அக்டோபர் ஆம் தேதி தொடங்கிமாம் தேதி வரை நடைபெறும் உலகளாவிய நீர் மாநாடு நீர் மேம்பாட்டிற்கு பெரிதும் துணை புரியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பலநாடுகளில் இருந்து நீர் துறை சார்ந்த வல்லுநர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றார்கள்.

அந்த அனுபவங்கள் மலேசிய நீர் மேம்பாட்டிற்கு பெரிதும் துணை புரியும் டாக்டர் சேபவியர் நம்பிக்கை தெரிவித்தார்.