பினாங்கு, அக்டோபர் 2-

இவ்வாண்டு இரண்டாவது முறையாக பினாங்கில் நடைபெற்ற ஆசியாவின் முன்னணி நேரடி விற்பனை நிறுவனமான கியுனெட்டின் உலகளாவிய மாநாடு,  வி – மலேசியா உலகம் முழுமையிலும் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை கவர்ந்தது.

கியுனெட்டின் 21 ஆம் ஆண்டின் நிறைவை  முன்னிட்டு  கியுஐ குழுமத்தின் நேரடி விற்பனை நிறுவனம் மாபெரும் கூட்டத்தை நடத்தியது. 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கியுனெட் விநியோகிப்பார்கள் பாயன் பாருவிலுள்ள பினாங்கு சப்டிரேனியன் அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி நிலையத்தில் கூடினர்.

பினாங்கு முதலமைச்சர் செள கொன் இயூ, கியுஐ குழுமத்தின் தலைவர் டத்தோஸ்ரீ விஜய் ஈஸ்வரன், துணைத் தலைவர் ஜோசப் பிஸ்மார்க்  ஆகியோர் இந்த மாநாட்டை தொடக்கி வைத்தனர்.

மேலும் கியுஐ குழுமத்தின் சிறப்பு ஆலோசகர் டான்ஸ்ரீ எஸ். வீரசிங்கம், பி.ஜே சிட்டி காற்பந்து கிளப்பின் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமால் மற்றும் கியுனெட்டின் இதர முன்னணி அனைத்துலக வர்த்தக பங்காளிகளும்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மத்திய கிழக்கு மத்திய ஆசியா ஆப்பிரிக்கா இந்திய துணைக் கண்டம் ஆசிய நாடுகள் மற்றும் இந்த மாநாட்டிற்கான உபசரணை நாடான மலேசியா ஆகியவற்றின் கியுனெட்டைச் சேர்ந்த முக்கிய வட்டார சந்தைகளின் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விநியோகிப்பார்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இந்த மாநாடு கவர்ந்தது. 2013ஆம் ஆண்டிலிருந்து   வி – மலேசியா மாநாட்டை பினாங்கு ஏற்று நடத்தி வருகிறது.

உங்களது ஆண்டு மாநாட்டிற்கு மீண்டும்  அழகிய தீவான பினாங்கை  கியுனெட் தேர்வு  செய்துள்ளது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என முதலமைச்சர்  செள தமது உரையில் தெரிவித்தார் . பல அம்சங்களில் பினாங்கு  தொழில்முனைவர் மாநிலமாக திகழ்கிறது அது தனது தொழில்முனைவர் உணர்வில் பிரபலமாக இருப்பதோடு இந்நாட்டில் அதிகமான  தலைமுறையினருக்காண தொழில் முனைவர்களையும் பினாங்கு மாநிலம் உருவாக்கியுள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார்.

எனவே உங்களது நிறுவனத்தின் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதற்கு பினாங்கு பொருத்தமான இடமாகும். உலகம் முழுவதிலும் தொழில் முனைவோர்களை  உருவாக்கி வரும் இந்த  நிறுவனம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகளாவிய மாநாட்டை இங்கு நடத்தியது மிகவும் பொருத்தமான ஒன்றாகும் என செள கொன் இயு கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த கியுனெட் விநியோகிப்பாளர் கள்  கைதட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த  20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் அதனையும் கடந்து உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாடுகளில் நேரடி விற்பனை துறையில் கியுனெட் முத்திரையை பதித்து வருவதாக கியுனெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மாலாவ் களுஷா  தெரிவித்தார்.

வாழ்க்கையை வலுப்படுத்தும் எங்களது தயாரிப்பு பொருட்கள் உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆரோக்கிய தீர்வாகவும் அவர்களுக்கு வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகவும் அமைந்துள்ளது.

இந்த ஆண்டு மாநாட்டில் சில வேளையில்  எங்களது பொருட்களையும் காட்சிக்கு வைத்து எங்களது நிறுவனத்தையும் எங்களது விநியோகிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அவர்கள் நேரடியாக சந்தித்து சேவை ஆற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்  வி-மலேசியா மாநாட்டில் விநியோகிப்பாளர்களின் புதிய தலைமுறையினரை நாங்கள் சந்திக்கிறோம். இவர்களில் பலர் முதல் முறையாக தொழில்  முனைவர்களாக காலடி எடுத்து வைக்கின்றனர். அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை நாங்கள் கொடுக்க வேண்டியது அவசியமாகும். இதன்காரணமாகவே நாங்கள்  பினாங்கை  தேர்வு செய்தோம். பினாங்கு பல ஆண்டு காலமாக இந்த மாநாட்டை நடத்தி வருகிறது.

நாட்டிற்குள் வந்து சேர்ந்தவுடன் எங்களது வாடிக்கையாளர்கள் சிறந்த அனுபவத்தை பெற வேண்டும்   என மாலாவ் களுஷா சுட்டிக்காட்டினார். வி- மலேசிய  செப்டம்பர் 2019 இல் பயிற்சித் திட்டங்களையும் நாங்கள் சேர்த்துள்ளோம். தன்முனைப்பு உரைகள்,  கியுனெட்டின் புதிய ஆரோக்கிய நல பொருட்களின்  பிரான்டுகள், மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நாங்கள் சேர்த்திருந்தோம்.

கியுனெட் விழாவின் முக்கிய அம்சமாக 30க்கும் மேற்பட்ட கியுனெட்  பொருட்களை காட்சிக்கு வைத்தோம். இந்த நிறுவனம் இதுவரை ஏற்பாடு  செய்த கண்காட்சிகளில் இதுவே கியுனெட் பொருட்களின் மிகப்பெரிய கண்காட்சியாக அமைந்தது. 2018ஆம் ஆண்டில் 100  பிரதான முக்கிய நேரடி விற்பனை நிறுவனங்களில் ஒன்று கியுனெட் என நேரடி விற்பனை செய்தி பதிவேடு குறிப்பிட்டுள்ளது.