திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > எந்த நேரத்திலும் பொதுத்தேர்தல்! பிரதமர் நஜீப் சூசகம்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

எந்த நேரத்திலும் பொதுத்தேர்தல்! பிரதமர் நஜீப் சூசகம்

கோலாலம்பூர், ஆக.24-
14ஆவது பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் நடைபெறலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சூசகமாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், அம்னோவின் தொகுதி அளவிலான பேராளர் மாநாடுகள் எவ்வித விவகாரங்களும் இன்றி சிறப்பாக நடைபெற்று வருவது 14ஆவது பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சியின் தேர்தல் எந்திரம் தயார் நிலையில் இருப்பதை காட்டுவதாக அவர் கூறினார்.

பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயுத்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் நடைபெறலாம். 14ஆவது பொதுத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரையில் நடைபெறவிருக்கும் அம்னோவின் மாநாடு தள்ளி வைக்கப்படும் என மெனாரா டத்தோ ஓன்னில் நடைபெற்ற அம்னோவின் உச்சமன்ற கூட்டத்திற்கு தலைமையேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நஜீப் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன