அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தொடங்கியது தளபதி 64 !
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தொடங்கியது தளபதி 64 !

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்கியது. வரும் தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் திரைக் காணவிருக்கும் வேளையில், 64 ஆவது படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 64. படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்கியது. விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனுன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விறுவிறுப்பான திரில்லர் கதையைக் கொண்டு உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை குறைந்த நாட்களில் படமாக்கி வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன