ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் மின்னலின் பசுமை இயக்கம்
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் மின்னலின் பசுமை இயக்கம்

கோலாலம்பூர்,  அக். 3-

இந்த ஆண்டு தீபாவளியை ‘பசுமை தீபாவளி’ எனும் கருப்பொருளில் கடமையுணர்வோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் மின்னல் எப்.எம், அதன் முதல் கட்டமாக நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் களம் இறங்கவுள்ளது.

வரும் சனிக்கிழமை அக்டோபர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஈப்போ, லிட்டல் இந்தியாவுக்கு அறிவிப்பாளர்கள் சுகன்யா, மோகன், திரேசா, பருவிந்தராஜ் ஆகியோர் நேயர்களைச் சந்திக்க வருகிறார்கள். இவர்களோடு பிரபல கலைஞர் டார்க்கியும் நேயர்களைச் சந்திப்பார்.

அரசாங்கம் நெகிழிப் பயன்பட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனை மையமாகக் கொண்டு நெகிழி பயன்பாட்டைக் குறைக்க மின்னலோடு நேயர்களும் கைகோர்க்கவிருப்பதாக மின்னல் எப்.எம்-மின் தலைவர் சுமதி தெரிவித்தார்.

தீபாவளியை இன்னும் சில வாரங்களில் கொண்டாடவிருக்கும் நாம், இந்த இயக்கத்தின் வழி, பொருட்களை வாங்கும் போது, நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை உபயோகப்படுத்துவது இயற்கைக்கு நாம் செய்யும் ஒரு கடமையாகும்.

இயற்கை நமக்கு தந்த பரிசு பசுமை. அதனை பேணிக்காப்பது நம் கடமை. கடமை உணர்வு மாறாத எங்களோடு பங்கு கொள்ளுமாறு சுமதி நேயர்களைக் கேட்டுக் கொண்டார்.

மின்னலின் பசுமை திட்டம் குறித்த பதிவுகளை நீங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர விரும்பினால் #gogreendeepavali பதிவு செய்யலாம்.

இயற்கையை நேசித்து பசுமையைக் காப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன