வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > வெற்றி பெறுவோம் என்பதை அறியாமல் வாக்குறுதிகள் அளித்தோம்! – டாக்டர் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

வெற்றி பெறுவோம் என்பதை அறியாமல் வாக்குறுதிகள் அளித்தோம்! – டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர் அக். 4-

14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. அந்த அடிப்படையில் தான் பல வாக்குறுதிகளை வழங்கியதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார். எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் நாங்கள் வழங்கிய வாக்குறுதி, இப்பொழுது எங்களுக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டார்.

முன்னதாக 14ஆவது பொதுத் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியின்படி கடுமையான சட்டங்களை ஒழிப்பதில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. ஆனால் அதனை செயல்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

14ஆவது பொதுத் தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற ஒரு எண்ணம் இருந்ததால் பல வாக்குறுதிகளை வழங்கினோம். நாங்கள் தோற்றாலும் கூட அந்த வாக்குறுதிகள் பழைய அரசாங்கத்திற்கு (தேசிய முன்னணி) பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என நாங்கள் நினைத்தோம் என மகாதீர் குறிப்பிட்டார்.

ஆனால் இப்போது நாங்கள் ஒரு அரசாங்கமாக இருப்பதால் எங்களின் சொந்த அறிக்கை எங்களுக்கே பாதகமாக மாறி விட்டது என பிரதமர் மகாதீர் குறிப்பிட்டுள்ளார். பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஒன் வோல்ட் தங்கும் விடுதியில் நடைபெற்ற அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்ட விதி மாநாட்டில் சிறப்புரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். ஆனால் அந்த ஆதரவை நாம் நாடாளுமன்றத்தில் கொண்டு இருக்கவில்லை என குறிப்பிட்ட அவர் இந்நிலையில் மக்களும் வேகமாக அனைத்து மாற்றங்களும் நடக்க வேண்டுமென நினைக்கிறார்கள்.

மக்கள் பொறுமை அற்றவர்கள். சட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். அதை செய்யமுடியாது. வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காக நடப்பு அரசாங்கத்தையும் அவர்கள் விமர்சிக்கிறார்கள் பொதுத் தேர்தலின் போது வாக்குறுதிகளை வழங்குவது மிகவும் எளிதானது ஆனால் வெற்றி பெற்ற பிறகு அதனை செயல்படுத்துவது எளிதல்ல. என்பதையும் மகாதீர் குறிப்பிட்டார்.

நம்பிக்கை கூட்டணி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் தேசத் துரோகச் சட்டம் 1948, குற்றத் தடுப்பு சட்டம் 1959, பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகள் சட்டம் 1971, அச்சு மற்றும் வெளியீட்டு சட்டம் 1984, தேசிய பாதுகாப்பு கவுன்சில் சட்டம் 2016 ஆகியவற்றை ரத்து செய்வதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன