வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பினாங்கு நன்னெறி மேம்பாட்டுக் கழகம் ஏற்பாட்டில் நல்லிணக்க விருந்து நிகழ்ச்சி!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பினாங்கு நன்னெறி மேம்பாட்டுக் கழகம் ஏற்பாட்டில் நல்லிணக்க விருந்து நிகழ்ச்சி!

பினாங்கு அக். 1-

மாநிலத்தில் பற்பல சமூக நடவடிக்கைகளை ஆர்வமுடன் மேற்கொண்டு அரும்பணி ஆற்றி வரும் பினாங்கு நன்னெறி மேம்பாட்டுக் கழகத்தினர், தங்களின் எதிர்காலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் தலையாய நோக்கத்தின் பேரில், நல்லிணக்க விருந்து நிகழ்ச்சியின் வாயிலாக நிதி திரட்டுவதற்கு முடிவெடுத்துள்ளனர்.

சமூகப் பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதற்கும், இங்கு செயல்பட்டு வரும் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு உதவுவதற்கும்,போதிய நிதி அவசியமென்பதை கருத்திற் கொண்டு அந்த அமைப்பினர்  தங்களின் நல்லிணக்க விருந்து நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வரும் நிலையில் இம்முறை அதனை 18ஆம் ஆண்டாக நடத்துவதற்கு உறுதி பூண்டுள்ளனர்.

நிதி திரட்டும் தலையாய நோக்கத்தின் அடிப்படையில் நடத்தப்படவிருக்கும் இந்த நல்லிணக்க விருந்து நிகழ்ச்சிக்கு பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டூழிய  தரப்பினர் பலர் நல்லாதரவு வழங்கிட, இவர்களோடு  உடன்பாடு கண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் டிசம்பர் திங்கள் 8ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.00 மணி வரையில் இங்கு ஜாலான் மெக்காலிஸ்டர் சாலையில் அமைந்திருக்கும் பினாங்கு நன்னெறி மேம்பாட்டுக் கழக வளாகத்தில் இந்த நல்லிணக்க விருந்து நிகழ்ச்சி திட்டமிட்டபடி விமரிசையாக நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக  அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விருந்து நிகழ்ச்சியின் வாயிலாக ஏறத்தாழ 2 லட்சம் ரிங்கிட் நிதியை திரட்டுவதற்கு இந்த அமைப்பின் நடப்பு நிர்வாகத்தினர் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதற்கான 50 ரிங்கிட் பெறுமானமுள்ள கொள்முதல் பற்றுச் சிட்டைகள்
தற்போது பரவலாக விற்பனைக்கு தயாராகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விருந்து நிகழ்ச்சிக்கு பினாங்கு மாநில அரசின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெரிதும் எதிர்ப்பார்த்திருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர், இதற்கான பற்றுச் சிட்டைகளுக்கு பொது மக்களின் நல்லாதரவை வேண்டுவதாக அன்பான கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

இது குறித்து மேல் விவரங்களை பெற விரும்பும் அன்பர்கள், 04-2262034/04-2267248 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன