அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது உரிமைக் கோரி ஏர் ஏசியா மனு தாக்கல்!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது உரிமைக் கோரி ஏர் ஏசியா மனு தாக்கல்!

சிப்பாங், அக் 4 .-

மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்- இன் (MAHB) துணை நிறுவனமான மலேசியா ஏர்போர்ட்ஸ் (சிப்பாங்) செண்டிரியான் பெர்ஹாட் (MASSB) மீது RM479.78 மில்லியனுக்கு உரிமைக் கோரி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ஏர் ஏசியா புதன்கிழமையன்று மனு தாக்கல் செய்துள்ளது.

MASSB-க்கு எதிரான இந்த உரிமைக் கோரல், klia2- இல் அந்நிறுவனம் வழங்கிய அலட்சியமான விமான நிலைய வசதிகள் நிர்வகிப்பினாலும் பராமரிப்பினாலும் மற்றும் பின் தங்கிய சேவைகளினாலும் ஏர் ஏசியா பெர்ஹாட் மற்றும் அதன் சக நிறுவனமான ஏர் ஏசியா X பெர்ஹாட் எதிர்கொண்ட இழப்புகள் மற்றும் சேதங்களைக் கருத்தில் கொண்டு கோரப்பட்டுள்ளது.

MAHB-இன் துணை நிறுவனமான MASSB, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) மற்றும் klia2-ஐ நிர்வகிக்கும் மற்றும் இயக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. மலேசிய வான் போக்குவரத்து ஆணையமான மாவ்கோம் (Mavcom) சட்டத்தின் பிரிவு 74-78 படி, ஏர் ஏசியா மற்றும் ஏர் ஏசியா X இவ்விவகாரம் தொடர்பில் சமாதானம் பெற அனுகியிருந்தது.

இருப்பினும், சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தித்தர மாவ்கோம் மறுத்துவிட்டது. மேலும், மாவ்கோமின் இந்த செயலற்ற தன்மையை நிதித்துறை மறு ஆய்வு செய்யக் கோரி ஏர் ஏசியா மேற்கொண்ட முயற்சியும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஏர் ஏசியா பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மத் மற்றும் ஏர் ஏசியா X தலைமை நிர்வாக அதிகாரி பென்யமின் இஸ்மாயில் கூறுகையில், ” நாங்கள் இதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் மலேசியா ஏர்போர்ட்ஸ் மற்றும் மாவ்கோம் ஆகியவை எங்களை இக்கட்டாயத்திற்குத் தள்ளிவிட்டனர். இந்த விவகாரத்தை இணக்கமாகத் தீர்ப்பதற்கான எங்களது சிறந்த முயற்சிகளுக்கு மத்தியில் சரியான முறையும் தளமும் அமையாததால் வேறு வழியின்றி எங்கள் நலன்களைப் பாதுகாக்க இவ்வுரிமை கோரல் மனுவை தாக்கல் செய்யும் கட்டாயத்தில் உள்ளோம்.

“இந்த சர்ச்சை, சமாதானத்திற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசியா ஏர்போர்ட்ஸ் எங்கள் மீது சிவில் வழக்கைத் தாக்கல் செய்ததால் தொடங்கியது. நாங்கள் எப்பொழுதுமே எங்கள் பங்குதாரர்களுடனான பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாகத் தீர்ப்பதில் முனைப்புக் காட்டுவோம். மேலும், இந்த வழக்கைத் தாக்கல் செய்வதில், மலேசியா ஏர்போர்ட்ஸ் எங்கள் மீது கடுமையாகவே நடந்து கொண்டுள்ளது என நாங்கள் வாதிடுகிறோம்.”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன