ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > டாக்டர் சேவியர் ஜெயக்குமாரை சந்தித்தார் கெடா மந்திரி பெசார்!
அரசியல்முதன்மைச் செய்திகள்

டாக்டர் சேவியர் ஜெயக்குமாரை சந்தித்தார் கெடா மந்திரி பெசார்!

புத்ராஜெயா அக்.4-

நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரை கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரீஸ் மகாதீர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பு வெள்ளிக்கிழமை காலை புத்ராஜெயாவில் உள்ள நீர், நீல, இயற்கை வள அமைச்சின் தலைமையகத்தில் நடந்தது.

இந்த சந்திப்பில் கெடா மாநில அரசு மத்திய அரசு இணைந்து செயல்படுவது குறித்த பேச்சு வார்த்தையும் நடந்தது. கெடா மந்திரி பெசாரின் வருகை தமக்கு மகிழ்ச்சி அளித்ததாக அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு மாநில மற்றும் மத்திய அரசின் மேம்பாட்டிற்கு முத்தாய்ப்பாக அமையுமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன