ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாட்டில் இணைந்து பணியாற்றுவோம் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாட்டில் இணைந்து பணியாற்றுவோம் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

கோலாலம்பூர், அக்டோபர் 6-

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என நீர் நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

நம்மிடையே கருத்து நிலவினாலும் தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த விஷயத்தில் ஒன்றிணைந்து தோள் கொடுக்க வேண்டும் என சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொழில் புரட்சி 4.0இல் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அனைவரின் கடமையாகும். இச்சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிகளில் அறிவியல் கூடங்கள் அமைக்கப் படுவது காலத்தின் கட்டாயம் என டாக்டர் சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஒரு அறிவியல் கூடம் கட்டுவதற்கு 80 ஆயிரம் வெள்ளி செலவாகிறது. இந்நிலையில் அந்த செலவை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் வாக்குறுதியளித்தார்.

தொழில் புரட்சி 4.0 நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் அது குறித்த அனைத்து விவகாரங்களையும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். உலகம் எதை நோக்கி பயணிக்க தயாராகிறது அது குறித்த விழிப்புணர்வு நமக்கு அவசியம்.

அப்போது தான் நாமும நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து தரமுடியும். என்று உலகளாவிய நிலையில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் சார்ந்த போட்டிகளில் மகத்தான சாதனையைப் படைத்து வருகிறார்கள்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்த அடைவு நிலை மலேசிய இந்தியர்களுக்கு மிகப்பெரிய பெருமையை தேடித் தந்து இருப்பதோடு தமிழ்ப்பள்ளிகள் மீதான நம்பிக்கையை வலுப்பெற செய்துள்ளது.

இந்நிலையில் அனைத்து தமிழ் பள்ளிகளிலும் அறிவியல் கூடங்கள் அமைக்கப்படும் அறிவியல் சார்ந்த நுணுக்கங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்வதும் காலத்தின் கட்டாயம்.

அதனை கருத்தில் கொண்டு சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் என்பது ஆயிரம் வெள்ளி செலவில் ஒரு அறிவியல் கூடம் அமைப்பதற்கு தான் உறுதுணையாக இருப்பதாக சேவியர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன