ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > பிக் பாஸ் 3இன் வெற்றியாளரானார் முகின் ராவ்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பிக் பாஸ் 3இன் வெற்றியாளரானார் முகின் ராவ்

சென்னை, அக்டோபர் 7-

விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசன் 3இல் மலேசிய கலைஞர் முகின் ராவ் வெற்றி பெற்றுள்ளார்.

17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் பல சவால்களையும் சிரமங்களையும் கடந்து சிறப்பாக விளையாடி முகின் ராவ் இந்த வெற்றியை பெற்றிருக்கிறார்.

தனது குரல் வளத்தால் மலேசிய மக்களை மட்டுமின்றி உலக முழுவதும் உள்ள இந்தியர்களை கவர்ந்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களில் சில பிரச்னைகளை எதிர்நோக்கியிருந்தாலும் ஒரு கட்டத்திற்கு பின்னர் கொடுக்கப்பட்ட விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி இந்த வெற்றியை பெற்றுள்ளார் முகின் ராவ்.

இறுதி சுற்றுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட் பெறும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார் முகின் ராவ். கோல்டன் டிக்கெட்டை பெறுபவர்கள் வெற்றி பெற முடியாது என்ற ஒரு கருத்து கணிப்பு கடந்த பிக் பாஸ் சீசன்களில் இருந்தது. அதனையும் தகர்த்தெரிந்து முகின் ராவ் வெற்றி பெற்றது மலேசிய மக்களை மட்டுமின்றி உலக முழுவதும் உள்ள பிக் பாஸ் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

மக்களின் வாக்குகளில் முதல் இடத்தை பிடித்த முகின் ராவிற்கு பிக் பாஸ் கோப்பையும் ரூ.50 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இதனிடையே, இரண்டாம் இடத்தில் சாண்டியும் மூன்றாம் இடத்தில் லோஸ்லியாவும் வெற்றி பெற்றனர்.

முகின் ராவின் கலை பயணம் வெற்றிகரமாக தொடர்வதற்கு அநேகன் இணையத்தள பதிவேடு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன