ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மருத்துவர் ஜெயஸ்ரீ ஸ்ரீனிவாசனின் இல்லத்தில் நவராத்திரி கொலு!
சமூகம்

மருத்துவர் ஜெயஸ்ரீ ஸ்ரீனிவாசனின் இல்லத்தில் நவராத்திரி கொலு!

பினாங்கு, அக்டோபர் 8-

பினாங்கில் பிரபல மருத்துவர்ஜெயஸ்ரீ ஸ்ரீனிவாசனின் (வயது 52) இல்லத்தில் நடைபெற்ற நவராத்திரி கொலு வைபவம் சிறப்பாக நடந்தேறியது.

திரளான பெண்கள் கலந்து கொண்டு இறை வழிபாடு நடத்தினர்.

பினாங்கில் ஒரு மருத்துவராகப் பணியாற்றுவதோடு, இந்து சமய நிகழ்ச்சிகளிலும் ஈடுபாடு கொண்டவர் ஜெயஸ்ரீ. தனது ஆதரவாளர்களோடு இணைந்து, அண்மையில் 28ஆம் ஆண்டாக தனது இல்லத்தில் விமரிசையாக இந்த நவராத்திரி கொலு வைபவத்தை நடத்தினார்.

சிறப்பு ஆராதனைகளுடன் தேவாரம்,திருவாசகம் போன்ற திருப்புகழ் பாடல்களை பாடிய பெண்கள் நவரத்திரியின் உற்சவத்தை வெளிப்படுத்தினர்.

ஆண்டுதோறும் தொழிலதிபரான தனது கணவர் எஸ்.கண்ணன் (வயது 55)  இந்த வைபவத்தை பொறுப்பேற்று நடத்தி வரும் நிலையில், இவ்வாண்டு “திருப்பதி மலை” என்ற கருப் பொருளுடன் தங்களின் நவரத்திரி கொலு வைபவம் நடத்தப்பட்டதாக  ஜெயஸ்ரீ கூறினார்.

நவராத்திரி கொலு வைபவத்தின் போது பக்தர்களுக்கு நினைவுச் சின்னமாக பரிசு பொருட்களையும் வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன